அடுத்தடுத்து 18 சர்வதேச விருதுகளைக் குவித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய கோர்ட்

Bookmark and Share

அடுத்தடுத்து 18 சர்வதேச விருதுகளைக் குவித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய கோர்ட்

இந்தியர்கள் உலக சினிமாக்களை அன்னாந்து பார்த்த காலம் மாறி, உலக நாடுகள் இந்திய சினிமாவை வியப்புடன் பார்க்கும் வகையில் பல இந்திய சினிமாக்கள் சர்வதேச அரங்கில் விருதுகளைக் குவித்து வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டினைப் பெற்றுள்ளது மராத்திய திரைப்படமான 'கோர்ட்'.

சைதன்யா தம்கனே எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அர்ஜெண்டினாவின் புவனஸ் அயர்ஸ் நகரில் நடந்த 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த விவேக் கோம்பருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

மக்கள் விரோத அரசுக்கு எதிராக தன்னுடைய பாடல்கள் மூலம் களப்பணியாற்றி வரும் மக்கள் பாடகர் நாராயண் காம்ப்ளேவை காவல்துறை கைது செய்கிறது. மும்பையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பவார் என்பவரை தன்னுடைய பாடல்கள் மூலம் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்.

இது உண்மையா? அல்லது அரசு எந்திரங்களுக்கு எதிராக கலகம் செய்யும் களப்பணியாளர்களுக்கு பாடம் புகட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கா? என்பதை நீதிமன்றத்தில் தன் வாதங்கள் மூலமாக நிரூபிக்க இன்னொரு மனித உரிமை போராளியான வழக்கறிஞர் போராடுகிறார்.

இது நாயகன் இது வில்லன் என்பது போன்ற ஒற்றைத்தன்மையான காட்சி சித்தரிப்புகள் படத்தில் கிடையாது. சொல்லப்போனால் படத்திற்கு ஹீரோவே கிடையாது. காம்ப்ளே வழக்கைச் சுற்றியே படம் நகர்கிறது. படத்தின் மிக முக்கியமான விஷயம், எவ்வித நேரடி வசனங்களும் இல்லாமல், இந்திய நீதித்துறையின் அவலங்களை சுட்டிக்காட்டுவதுதான்.

கடந்த செப்டம்பர் மாதம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'கோர்ட்' மும்பை, வியன்னா, அண்டால்யா, சிங்கப்பூர் என்று பல நகரங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று இதுவரை 17 விருதுகளைப் பெற்றுள்ளது. தற்போது மேலும் ஒரு சர்வதேச விருதை வென்றதன் மூலம் இந்திய சினிமாவை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது கோர்ட்.


Post your comment





Related News
குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதா?
ஆஸ்கார் ரேஸில் காக்கா முட்டை, பாகுபலி அவுட் சைலன்ட்டாக நுழைந்தது கோர்ட்
ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ’கோர்ட்’ தேர்வு
தேசிய விருது பெற்ற படம் திரையிட எதிர்ப்பு
தேசிய விருதெனும் சிகரத்தை எட்டிப்பிடித்த திரைப்பட ஆளுமைகளின் முழுமையான பட்டியல்
இணையதளங்களில் ஓ காதல் கண்மணி - மணிரத்னம் வழக்கு
நண்பேன்டா படத்திற்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி வழக்கு
கொம்பன் படத்தை வெளியிட தடை இல்லை : கோர்ட்
லிங்கா படம் நாளை வெளியாகுமா? ஐகோர்ட்டு உத்தரவால் பரபரப்பு
லிங்கா படத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions