நண்பேன்டா படத்திற்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி வழக்கு

Bookmark and Share

நண்பேன்டா படத்திற்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி வழக்கு

உதயநிதி, தான் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள நண்பேன்டா படத்திற்கு வரிவிலக்கு கேட்டு சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். இயக்குநர் ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கியுள்ள படம் நண்பேன்டா.

இப்படத்தின் ஹீரோவாக உதயநிதியும், ஹீரோயினாக நயன்தாராவும் நடித்துள்ளனர். கூடவே சந்தானம் காமெடி ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது, படமும் இன்று ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் நண்பேன்டா படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது. ஆனால் வரிவிலக்கு தர மறுக்கிறார்கள், கேட்டால் படத்தில் ஆபாச காட்சிகளும், வன்முறை காட்சிகளும் இருப்பதாக கூறுகிறார்கள் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற கொண்ட நீதிமன்றம், ஒருவார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி வணிகவரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions