எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!

Bookmark and Share

எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!

எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் தாமதம் செய்வதால் அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு சசிகலா ஆளுநரை சந்தித்து கடந்த 9ஆம் தேதி கோரிக்கை விடுத்தார். கோரிக்கை விடுத்தும் பெருன்பான்மை எம்எல்ஏக்களை கையில் வைத்துள்ள சசிகலாவுக்கு ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை. 

இதனால் எரிச்சல் அடைந்த சசிகலா ஆளுநரையே மிரட்டும் வகையில் அறிக்கை வெளிட்டதோடு, ஓரளவுதான் பொறுமை காக்க முடியும் அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரித்திருந்தார்.

இருப்பினும் ஆளுநர் இதுவரை சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் போயஸ்கார்டனில் அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆட்சி அமைக்க சசிகலாவுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். 

எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதாக அவர் கூறினார். மேலும் ஆளுநர் தாமதம் செய்வதால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெறும் என்றும் சிஆர்.சரஸ்வதி குற்றம் சாட்டினார்.


Post your comment





Related News
போனில் ஆபாசம். சி.ஆர்.சரஸ்வதி போலீஸ் புகார்
கிரிமினல்ஸ் கையில் ஆட்சியா- கமல்ஹாசன் நேரடி தாக்குதல், ஒரே தீர்வு இதுதான்
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
நான் செக்ஸ் தொல்லைகளை சந்தித்தேன்: இலியானா
சிங்கம்-3 இத்தனை கோடி வசூல் செய்யுமா? அதிர வைத்த ரிப்போர்ட்
திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அனுமதி
விஜய் கோட்டையில் விழுந்த இடி- ரசிகர்கள் வருத்தம்
சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்: இலியானா
ரூ 100 கோடி பட்ஜெட்டில் தல அஜித்- அதிர்ந்த கோலிவுட்
தெறி படத்தை பார்த்து கதறி அழுத சமந்தா குடும்பம் – இதுதான் பெஸ்ட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions