தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி CSK ஜெய் குஹைனி

Bookmark and Share

தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி CSK ஜெய் குஹைனி

SS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில்,  வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 13 ஆம் தேதி வெளிவர உள்ளது CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா திரைப்படம் . புதுமுக இயக்குனர் சத்திய மூர்த்தி இயக்கும் இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் மற்றும் ‘ஆரோகணம்’ ஜெய் குஹைனி நடித்துள்ளனர்.

B.Sc ஃபிலிம் டெக்னாலஜி மாணவியான ஜெய் குஹைனி எதிலும் புதுமையை தேடும் நாயகி. CSK  படத்தில் உள்ள தனது  அனுபவங்களை பற்றி விவரிக்கிறார். “ CSK படத்தில் கார்த்திகா எனும் முக்கிய கதாப்பாத்திரத்தில்   நடித்துள்ளேன். படத்தில் எனக்கு வசனங்கள் குறைவு. நடிப்பிற்கு இடம் அதிகமாகவே இருந்தது. நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்த போது இந்த கதையை இயக்குனர் சத்யா  என்னிடம் கூறினார். உடனே முடிவை மாற்றிக்கொண்டேன்.”  என்று கூறுகிறார் குஹைனி.

“200 லிட்டர் தண்ணி இருக்கும் டேங்கில் கைகால்கட்டி முங்க விட்டது, இரண்டு மாடிகள் கையை கட்டி தரதரவென இழுத்து சென்றது என ஒரு ஹீரோக்கு நிகராய் காட்சிகள் இருந்தது. இத்தகைய காட்சிகள் டூப் போடாமல் நடிப்பதில் அங்கங்கே காயங்கள் ஏற்பட்டாலும் எனக்கு மிகவும் பிடிதிருந்தது.”

“நாராயண் ஒரு காட்சியில் என்னை அறைய  வேண்டும் அப்படி அறைய  பொழுது அவரது சட்டை பட்டனில் எனது நீண்ட முடி சிக்கிக் கொண்டது. அன்று முடிவெடுத்து எனது கூந்தலின் நீளத்தை குறைத்து விட்டேன்.“
“CSK படத்தில் நடித்த பிறகு, ஏஞ்சலினா ஜோலி போல் ஒரு ‘Tom Boy’ கதாப்பாத்திரத்தில் அதிரடி சண்டை காட்சிகளுடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக மாறியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘உந்தன் முகம் பார்க்க’ பாடல் அனைவரையும் கவரும். இப்படத்தில் பல நபர்களின் நெடு நாள் உழைப்பு இருக்கிறது. அனைவரும் பார்க்கக் கூடிய குடும்பத் திரைப்படம்.  அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.”  என்று மெல்லிய இதழ்கள் புன்னகை சிதறக் கூறினார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions