சென்னையில் கியூபா திரைப்பட விழா நடக்கிறது

Bookmark and Share

சென்னையில் கியூபா திரைப்பட விழா நடக்கிறது

சென்னையில் கியூபா திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சென்னை ரஷிய கலாச்சார மையத்தில் நாளை வரை நடக்கும் இந்த விழாவில், கியூபா நாட்டில் தயாரான முக்கிய படங்கள் திரையிடப்படுகிறது.

இந்த படங்கள் வெளிமார்க்கெட்டில் டிவிடியாக கிடைக்காத அரிய படங்களாகும். உலக திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்த படங்களை தேர்ந்தெடுத்து திரையிடுகிறார்கள்.

இதனை இந்தோ சினி அப்ரியேஷன் அறக்கட்டளை பொதுச் செயலாளர் தங்கராஜ் துவக்கி வைத்தார். "உலகில் குறைந்த அளவே திரைப்படங்களை தயாரிக்கும் நாடுகள் கூட தங்கள் படத்தை வெளிநாடுகளில் திரையிட விரும்புகிறது.

அதன் மூலம் தங்கள் நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பரப்ப விரும்புகிறது. திரைப்படத்தில் ஆர்வம் இல்லாத நாடுகள் கூட திரைப்படம் எல்லைகளை தாண்டிய மகத்தான ஊடகம் என்பதை உணர்ந்திருக்கிறது.

எங்கள் அமைப்பின் சார்பில் இன்னும் பல நாடுகளின் திரைப்பட விழாக்களை நடத்த உத்தேசித்திருக்கிறோம்" என்றார் தங்கராஜ். "கியூபா படங்களை காண அனுமதி இலவசம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படும்" என்று விழா நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions