1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால் புதிய படங்கள் வாங்க வினியோகஸ்தர்கள் தயக்கம்

Bookmark and Share

1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால் புதிய படங்கள் வாங்க வினியோகஸ்தர்கள் தயக்கம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது கோடிக்கணக்கில் பணம் புழங்கும் திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்-நடிகைகள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.


படப்பிடிப்புகளுக்கு வரும் நடிகர்-நடிகைகள், துணை நடிகர்கள், தொழிலாளர்கள் போன்றோருக்கு தயாரிப்பாளர்கள் ரொக்கமாகவே சம்பளம் கொடுத்து வந்தனர். ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவிட்டனர். 1,000, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம் நின்றதால் அன்றாட செலவுகளை சமாளிக்க தயாரிப்பாளர்கள் திணறுகிறார்கள். பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன.


சில பட அதிபர்கள் நடிகர்-நடிகைகள் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் காசோலைகளை வழங்குகிறார்கள். சமையல்காரர்கள், லைட்மேன்கள், பாதுகாவலர்கள், டீ, காபி கொடுப்பவர்கள், பாத்திரங்களை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் போன்றோரும் காசோலைகளிலேயே சம்பளம் பெறுகிறார்கள். 


புதிய படங்களின் தொடக்க விழா மற்றும் பூஜைகள் நடக்கவில்லை. பாடல் வெளியீடு, டிரைலர் வெளியீடு உள்ளிட்ட பல பட விழாக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. 50-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. அந்த படங்களை வாங்க வினியோகஸ்தர்கள் முன் வராததால் முடங்கிக்கிடக்கின்றன


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions