30 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடம் மட்டுமே கதை கேட்கும் சி.வி.குமார்!

Bookmark and Share

30 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடம் மட்டுமே கதை கேட்கும் சி.வி.குமார்!

சினிமா உலகைப் பொறுத்தவரை சிலருக்கு ஓரிரு படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்ததுமே தனித்து படம் இயக்க சான்ஸ் கிடைத்து விடும். ஆனால் பலருக்கு அத்தனை எளிதில் சினிமா கதவுகள் திறப்பதில்லை. 20 வருடங்களுக்கு மேலாக அசோசியேட் டைரக்டர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் 50 வயதுக்கு பிறகும் படம் இயக்கி ஜெயிக்கிறார்கள்.

ஆனால், சமீபகாலமாக ஓரிரு குறும் படம் இயக்கி விட்டு வரும் இளைஞர்கள்தான் அதிகப்படியான ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். அதிலும் குறைந்த பட்ஜெட் படம் இயக்கும் வித்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் சி.வி.குமார் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் குறும் பட டைரக்டர்களுக்கு உடனடியாக சான்ஸ் கொடுக்கிறார்கள்.

இதில், சி.வி.குமாரைப் பொறுத்தவரை ஒரு பாலிஸி வைத்திருக்கிறார். அதாவது 30 வயதுக்கு கீழ் உள்ள டைரக்டர்களிடம் மட்டுமே அவர் கதை கேட்பாராம். அதுவும் அவர்கள் ஏதாவது வித்தியாசமான குறும் படங்கள் இயக்கியிருக்க வேண்டுமாம்.

இந்த தகுதிகள் இருப்பவர்கள் சொல்லும் கதை அவருக்கு பிடித்து விட்டால் அவரது திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தில் படம் இயக்க வாய்ப்பு கொடுக்கிறாராம். இதனால் 20 வயது முதல் 30 வயது கொண்ட இளவட்ட இயக்குனர்களாக அவரது அலுவலகத்தை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளனர்.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்
இறுதி கட்ட படப்பிடிப்பில் சி.வி.குமாரின் மாயவன்!
பிரபல தயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்கும் “மாயவன்”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions