9 கதைகளை ஓகே பண்ணி வைத்திருக்கும் சி.வி.குமார்!

Bookmark and Share

9 கதைகளை ஓகே பண்ணி வைத்திருக்கும் சி.வி.குமார்!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி தயாரிப்பாளராகியிருப்பவர் சி.வி.குமார். அவரது திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் வெளியான அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை என பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. தற்போது 6 படங்களை அவர் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

முக்கியமாக, முன்னணி டைரக்டர்கள் என்பது இல்லாமல், திறமையான புதியவர்களுக்கு அவரது அலுவலக கதவுகள் எந்நேரமும் திறந்தே இருக்கின்றன. அதனால் இளையதலைமுறை இயக்குனர்கள் சி.வி.குமாரின் அலுவலகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், அவரது அலுவலகத்தில் புதியவர்களிடம் கதை கேட்பதற்கென்றே ஒரு இலாகா இயங்கிக்கொண்டிருக்கிறது. அப்படி அவர்கள் கேட்ட நூற்றுக்கணக்கான கதைகளில் இருந்து தற்போது 9 கதைகளை அடுத்தடுத்து படம் தயாரிப்பதற்கு ஓகே பண்ணி வைத்திருக்கிறார் சி.வி.குமார்.

அதனால் அடுத்தபடியாக யாராவது சொல்லும் கதைகள் ஓகே ஆனாலும், இன்னும் ஓராண்டுக்கு பிறகு அந்த கதை படமாக்கப்படுமாம்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions