இந்த ஆண்டு படங்களின் எண்ணிக்கை குறைந்து விடும்! - சி.வி.குமார்

Bookmark and Share

இந்த ஆண்டு படங்களின் எண்ணிக்கை குறைந்து விடும்! - சி.வி.குமார்

அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி என பல ஹிட் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். சிறிய பட்ஜெட்டில் தயாரித்த இப்படங்கள் எல்லாமே பெரிய அளவில் வசூலித்தன.

அதனால் கோடம்பாக்கத்தின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்து நின்றார் சி.வி.குமார். ஆனால், சரபம், எனக்குள் ஒருவன் போன்ற படங்கள் அவருக்கு பெருத்த நஷ்டத்தை கொடுத்து விட்டன. இருப்பினும் தற்போது இன்று நேற்று நாளை, இறைவி போன்ற படங்களை தயாரிக்கும் அவர், மாயவன் என்ற படத்தை தயாரித்து இயக்கியும் வருகிறார்.

இந்தநிலையில், எதிர்கால சினிமா குறித்து சி.வி.குமார் கூறுகையில், சமீபகாலமாக படங்கள் ஓடுவதே அரிதாகி விட்டது. இருப்பினும் அதிகப்படியான படங்கள் வெளியாகிக்கொண்டேயிருக்கின்றன.

ஆனால், தற்போது தோல்வி பெரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், இந்த ஆண்டு இறுதிக்கு பிறகு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விடும் என்கிறார். மேலும், எனது தயாரிப்பிலும் தமிழில் படங்களை குறைத்து விட்டு, தெலுங்கு, மலையாளத்தில் அதிகமாக தயாரிக்கப்போகிறேன் என்கிறார் அவர். 


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions