டி.இமானுக்கு உற்சாகம் கொடுத்த டண்டனக்கா!

Bookmark and Share

டி.இமானுக்கு உற்சாகம் கொடுத்த டண்டனக்கா!

2002ம் ஆண்டு காதலே சுவாசம் படத்தில் இசையமைப்பாளரானவர் டி.இமான். அதற்கடுத்து விஜய் நடித்த தமிழன் படத்துக்கு இசையமைத்தார். ஆனால் இரண்டாவது படத்திலேயே ஒரு முன்னணி நடிகரின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்று விட்டபோதும், இமான் முன்னணி இசையமைப்பாளராகவில்லை.

அந்த வகையில் பல வருட போராட்டத்துக்கு பிறகு மைனா படம் மூலம்தான் அவர் வெளிச்சத்துக்கு வந்தார். அதைத் தொடர்ந்து கும்கி, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டியநாடு, ரம்மி, கயல் போன்ற படங்கள்தான் அவருக்கு ஹிட்டாக அமைந்தன.

ஆனால், அப்படி அவரது இசையில் வெற்றி பெற்ற அனைத்து படங்களுமே கிராமத்து கதையில் உருவானவை. அதனால் கிராமத்து கதைகள் என்றாலே டி.இமான் ஹிட் பாடல்களை கொடுப்பார் என்றாகி விட்டது.

இந்த நிலையில், தன்னால் நகரத்து கதைகளுக்கேற்ற இசையையும் கொடுக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக தற்போது ரோமியோ ஜூலியட் படத்தில் வித்தியாசமான இசைக்கலவையை செய்திருப்பதாக சொல்கிறார் டி.இமான்.

அதுபற்றி அவர் கூறுகையில்,

இதுவரை தென்னை மரத்தோப்பு, மாட்டு வண்டிகளைப்பார்த்து டியூன் போட்டேன். ஆனால் இந்த படத்துக்காக நகரத்து சூழலில் 5 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வெரைட்டியாக இருக்கும் என்று கூறும் டி.இமான், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டண்டனக்கா பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது என்கிறார்.


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
எமனாக மாறும் யோகிபாபு
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions