சென்டிமென்டில் சிக்கிய டி.இமான்!

Bookmark and Share

சென்டிமென்டில் சிக்கிய டி.இமான்!

இசையமைப்பாளர் இமான், மைனா படத்திற்கு பிறகுதான் ரசிகர்களுக்கு முழுசாக தெரியும். ஆனால் அவரோ, 2002ல் காதலே சுவாசம் என்ற படத்தில் இசையமைக்கத் தொடங்கி, அதே ஆண்டில் விஜய் நடித்த தமிழன் படத்துக்கும் இசையமைத்தார்.

அதனால் அப்போதே அவர் பிரபல இசையமைப்பாளராகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனபோதும், அடுத்தடுத்து அவர் சத்யராஜ், அர்ஜூன், பிரபு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தபோதும் மார்க்கெட்டில் பின்தங்கியேதான் இருந்தார்.

அந்த வகையில், சுமார் 40 படங்களுக்கு இசையமைத்த பிறகு மைனா படம்தான் அவரை வெளிச்சம் போட்டுக்காட்டியது. அதிலிருந்து மார்க்கெட்டை ஸ்டெடியாக்கிக்கொண்டு வரும் இமான், இப்போது முன்னணி டைரக்டர், முன்னணி நடிகர் என்பதை விட தனது வெற்றியில் இருந்து வரும் டெக்னீசியன்களை விடாமல் பிடித்து வைத்திருக்கிறார்.

அந்த வகையில், செண்டிமென்டில் சிக்கியிருக்கும் டி.இமான், தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலுமே தனது வெற்றி படங்களில் இருந்த இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள், பாடகர் - பாடகிகள் என அனைவரையும் தொடர்ந்து தனது படங்களில் பயன்படுத்தி. இது எனது வெற்றிக்கூட்டணி என்றும் கூறி வருகிறார்.


Post your comment





Related News
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions