பாலிவுட் பாடகரை தமிழுக்கு அறிமுகப்படுத்திய டி.இமான்

Bookmark and Share

பாலிவுட் பாடகரை தமிழுக்கு அறிமுகப்படுத்திய டி.இமான்

படத்திற்கு படம் வித்தியாசமான குரல்களை தேடிக் கண்டுபிடித்து தனது இசையில் பாட வைக்கும் இசையமைப்பாளர் டி.இமான், தற்போது பாலிவுட் பாடகர் அர்மான் மாலிக் என்பவரை தமிழுக்கு அறிமுகப்படுத்தி பாட வைத்திருக்கிறார். அர்மான் மாலிக் பாலிவுட்டின் பிரபல பாடகர்.

இந்தியில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். சொந்தமாக ஆல்பங்கள் தயாரித்தும், பாடல்கள் எழுதியும், இசையமைத்தும் வருகிறார்.

இந்நிலையில், ஆர்யா-தமன்னா தமிழில் நடித்து வரும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்திற்கு டி.இமான் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் அர்மான் மாலிக். இப்பாடலின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இவர் அறிமுகமாகியிருக்கிறார். அந்த பாடல் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளதாம்.

‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தை பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்கு பிறகு ஆர்யாவும்-ராஜேஷும் இணைந்து இந்த படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

வழக்கம்போல, இந்த படத்தை காமெடி கலந்து எடுத்து வருகிறார் ராஜேஷ். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இந்த வருடத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions