நாட்டுப்புற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இமான் - யுகபாரதி

Bookmark and Share

நாட்டுப்புற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் இமான் - யுகபாரதி

தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் இமான். இவருடைய இசையில் பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன. மேலும் பல புதிய பட வாய்ப்பும் இமானுக்கு வந்த வண்ணம் உள்ளது. இவரது இசையில் சூப்பர் ஹிட்டான பெரும்பாலான பாடல்களை எழுதியவர் யுகபாரதி.

இமான் இசைக்கு பாடல் எழுதுவது குறித்து இவர் கூறும்போது, ‘நான் இமான் இசையில் பல பாடல்கள் எழுதியிருக்கிறேன். நாங்கள் கும்கி படத்தில் இருந்து நாட்டுப்புற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படி எங்கள் கூட்டணியில் உருவாகும் பாடல்களுக்கு நாட்டுப்புற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறோம்‘ என்றார்.

இமான் - யுகபாரதி கூட்டணியில் ‘ரஜினி முருகன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.


Post your comment





Related News
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions