‘துருவங்கள் பதினாறு’ வெற்றியால் தேசிய விருது பெறும் ஆர்வம் வந்திருக்கிறது: ரகுமான்

Bookmark and Share

‘துருவங்கள் பதினாறு’ வெற்றியால் தேசிய விருது பெறும் ஆர்வம் வந்திருக்கிறது: ரகுமான்

சமீபத்தில் திரைக்கு வந்த ‘துருவங்கள் பதினாறு’ படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரகுமான் நடிப்பு பெரிதும் பேசப்படுகிறது.

இதுகுறித்து ரகுமான் அளித்த பேட்டி....

“இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தில் என்னை நடிக்க வேண்டும் என்று கேட்டபோது நான் உடனே  ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இந்த படத்தில் நான் போலீஸ் ‘கெட்டஆப்’பில் நடிக்க வேண்டும்  என்றது. மற்றொன்று இதன் இயக்குனருக்கு 21 வயது தான் ஆகிறது. அனுபவம் இல்லாத ஒருவர் இயக்கத்தில் நான் நடித்து படம்  பாதியில் நின்றால், தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்று கருதினேன்.

ஆனால் அவர் கதை எழுதி இருந்தவிதமும், அதில் நான் நடிக்க வேண்டும் என்ற படத்தின் ஒட்டு மொத்த குழுவின் வற்புறுத்தலும்  இயக்குனர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. திரில் கதையை அவர் சொல்லி இருந்த விதமும் நான் நடிக்க காரணம். இந்த படத்தின் இயக்குனர் உள்ளிட்ட இளைஞர்கள் அனைவரும் திறமையானவர்கள்.

படம் தயாரான பிறகு தான் ஒரு அற்புதமான படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது தெரிந்தது. என் நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன. இதில் நடித்ததற்காக எனக்கு சில விருதுகளையும் அறிவித்து இருக்கிறார்கள்.

‘துருவங்கள் பதினாறு’ உண்மையாகவே எனக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. அடுத்து தேசிய விருது பெற  வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் இந்த படம் தான்” என்றார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions