டாடி மம்மி யாருமில்ல டியூன் இந்தியிலும் வெளிவருகிறது

Bookmark and Share

டாடி மம்மி யாருமில்ல டியூன்  இந்தியிலும் வெளிவருகிறது

இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், எஸ்.எஸ்.தமன் ஆகிய இருவரும் தாங்கள் கொடுத்த பாடல் ஹிட்டுகளை தமிழிலும், தெலுங்கிலும் மாறிமாறி பயன்படுத்தி வந்தனர்.

புலி படத்துக்கும் தேவிஸ்ரீ இசையமைக்கிறார். தற்போது வில்லு படத்தில் தனது இசையில் உருவாகி சூப்பர் ஹிட்டான, டாடி மம்மி வீட்டில் இல்லை தடைபோட யாருமில்லை என்ற பாடலை இப்போது இந்தி படத்துக்கும் பயன்படுத்தப் போகிறாராம்.

வில்லு படத்தில் இடம்பெற்ற அந்த பாடலை ஏற்கெனவே தெலுங்கில் சங்கர் தாதா ஜிந்தாபாத் என்ற படத்துக்கும் தற்போது இந்தியில் பாக் ஜானி என்ற படத்திற்கும் பயன்படுத்துகிறார்.

இப்பாடலின் ஆண்குரலை தானே பின்னணி பாடும் அவர், பெண் குரலை தாக்க தாக்க படத்தில் நடித்த மம்தா மோகன்தாஸை பாட வைக்கிறாராம். ஏற்கெனவே தமிழில், தெலுங்கில் ஹிட்டான இப்பாடல் இந்தியிலும் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த டியூனை இன்னும் பல மொழிப்படங்களுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளாராம்.

காரணம், மொழிபேதமில்லாமல் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரக்கூடிய ஈர்ப்பு அந்த டியூனில் இருப்பதாகவும் சொல்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions