ஆகஸ்டில் துவங்கும் வெங்கடேஷின் அடுத்த படம்

Bookmark and Share

ஆகஸ்டில் துவங்கும் வெங்கடேஷின் அடுத்த படம்

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான வெங்கடேஷ் நடிப்பில் வெளிவந்த கோபாலா கோபாலா எனும் தெலுங்கு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து வெங்கடேஷ் நடிக்கும் படங்கள் குறித்து தகவல்கள் வெளிவந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மேலும் தமிழில் வெளிவந்த சலீம் படத்தை தெலுங்கில் டாக்டர் சலீம் என்ற பெயரில் இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் நிர்மல் குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க வெங்கடேஷ் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் கரந்தி மாதவ் இயக்கும் படத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டோலிவுட்டில் ஒனமல்லுஎனும் படத்தின் வாயிலாக அறியப்படும் இயக்குநராக மாறிய கரந்தி மாதவ் நடிகர் சர்வானந்த் நடிப்பில் மல்லி மல்லி இதி ராணி ரோஜு எனும் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

கரந்தி மாதவ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. சுரேஷ் புரொடக்ஷன் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என்றும் கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


Post your comment





Related News
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
ராஜீவ் கொலை வழக்கு படத்தில் ராணா
டிஆர் கார்த்திகேயனை சந்தித்த ராணா: டிஆர்கே யாருன்னு தெரியும்ல?
பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
கதை முடிந்தது! பிரபாஸின் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்
போலீசிடம் மாட்டிய பிரபல நடிகர்- உதவ மறுத்த சக நடிகர்
பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யாகிருஷ்ணன், தமன்னாவிற்கு பதில் முதலில் இவர்கள் தான் நடிக்கவிருந்தார்களா?
ராணா மட்டும் அல்ல இந்த பிரபலங்களும் குறைபாடை கடந்து வந்தவர்களே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions