குழந்தைகளின் சம்மர் ஸ்பெஷல் படம் ரெடி!

Bookmark and Share

குழந்தைகளின் சம்மர் ஸ்பெஷல் படம் ரெடி!

பொதுவாகவே சம்மர் சீசனில் குழந்தைகளை கவருவதற்காகவே சில படங்கள் வெளியாகும். தற்போது டோலிவுட்டில் தயாராகி வரும் தனவீரசூர கர்ணா படத்தில் குழந்தை நட்சத்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் படமாகும்.

இந்த படத்தின்  முக்கிய கதாபாத்திரத்தில் மறைந்த பிரபலமான நந்தமூரி ஜானகிராமின் மூத்த மகனான தாரகா ராமா ராவ் என்ற  மாஸ்டர் என் டி ஆர் நடிக்கிறார். கிருஷ்ணா பரமாத்மாவின் கதை பின்புலத்தில் அமைக்கப்பட்டு உள்ள இந்த படத்தில் நிறைய குழந்தைகள் நடிக்கின்றனர்.

கடவுள் கிருஷ்ணனின் கதாபாத்திரத்தில் மாஸ்டர் என் டி ஆர் நடிக்கிறார்.   நந்தமூரி ஜானகிராமின் இளைய மகனான சௌமித்ரா, சகாதேவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

கடந்த 1977ம் ஆண்டு வெளிவந்த தனவீரசூர கர்ணா படத்தை இயக்கி, தயாரித்து, நடித்தது தலை சிறந்த நடிகரும், ஆந்திர மாநில மறைந்த முன்னாள் முதல்வருமான  என் டி ராமாராவ் ஆகும்.

இப்போது அந்த புகழ் பெற்ற குடும்பத்தில் இருந்து மற்றொரு குழந்தை நட்சத்திரம் உதயமாகிறது. பிரபல இயக்குனரான ஜே வி ஆர் இயக்கும் புதிய தனவீரசூர கர்ணா படத்தை பிரபல சலசணி வெங்கடேஸ்வர  ராவ் மற்றும் பாலராஜ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த குழந்தைகள்  ஸ்பெஷல் வரும் மே 28ம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions