டன்டனக்கா பாடல் விவாகரம்: சமசரமாக செல்ல கோர்ட் உத்தரவு

Bookmark and Share

டன்டனக்கா பாடல் விவாகரம்: சமசரமாக செல்ல கோர்ட் உத்தரவு

ஜெயம்ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தை லக்ஷ்மண் இயக்கி உள்ளார். நந்தகுமார் தயாரித்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் டங்காமாரி ரோகேஷ் "டன்டனக்கா னக்கா னக்கா..." என்ற பாடலை எழுதி அனிருத் பாடி உள்ளார்.

இந்த பாடலில் டி.ராஜேந்தர் பற்றியும், அவரது புகழ்பெற்ற வசனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு படத்தில் பல காட்சிகள் என்னை கிண்டல் செய்கிறது, இது எனது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: ரோமியோ ஜூலியட் படத்தை ஒரு வாரத்திற்குள் மனுதாரர் டி.ராஜேந்தருக்கு போட்டுக் காட்ட வேண்டும்.

அவர் படம் பார்க்கும்போது இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் உடன் இருக்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் இருந்தால் அதுகுறித்து இரு தரப்பினரும் சமரசமாக பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

இதனை ஒரு அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக இரு தரப்பு வழக்கறிஞர்களும் கமிஷனர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அடுத்த விசாரணை வருகிற ஜூன் 4ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions