சீன வசூலில் புதிய சாதனை படைத்த ‘தங்கல்’

Bookmark and Share

சீன வசூலில் புதிய சாதனை படைத்த ‘தங்கல்’

சமீபகாலமாக சீனாவில் இந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏற்கனவே சீனாவில் திரையிடப்பட்ட அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ ஆகிய படங்கள் நன்றாக ஓடின. இப்போது அவரது ‘தங்கல்’ படத்துக்கும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட இந்திய படங்களின் சாதனையை இது முறியடித்து வசூல் ரூ.500 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத படங்களில் ‘தங்கல்’ தான் சாதனை படைத்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

இதற்கு முன்பு ‘யுவர்நேம்’ என்ற ஜப்பான் மொழிப்படம் 575.87 மில்லியன் யென் வசூலித்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது ‘தங்கல்’ அந்த வசூல் சாதனையை கடந்து இருக்கிறது.தற்போது வரை ‘தங்கல்’ ரூ.740 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.

சீனாவில் பல்வேறு திரையரங்குகளில் ‘தங்கல்’ படம் 68 ஆயிரம் காட்சிகள் கடந்து இருக்கிறது. 11 மில்லியன் மக்கள் இதுவரை இந்த படத்தை பார்த்து இருக்கிறார்கள்.`தங்கல்' படத்தின் வசூல் சாதனையை அடுத்து, `பாகுபலி-2' படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
இனியும் என்ன கிண்டல் பண்ணா, அவ்ளோ தான் - பிக் பாஸ் பிரபலம் ஆவேசம்.!
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
கொடிய நோயால் தாக்கப்பட்ட இர்பான் கான் - சோகத்தில் ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
யூத் பட நடிகையா இது? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் அண்ணன் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions