விரைவில் டார்லிங் படத்தின் இரண்டாம் பாகம்?

Bookmark and Share

விரைவில் டார்லிங் படத்தின் இரண்டாம் பாகம்?

தமிழ்த்திரை உலகில் தற்போது ஆச்சர்யமாகப் பேசப்பட்டு வரும் விஷயம் என்ன தெரியுமா? ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த டார்லிங் படத்தின் வெற்றிதான். அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படத்தை சாம் ஆண்டன் இயக்கியிருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான முதல் படம் இது! சமீபகாலமாக பேய் படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்து வருகிறது. அரண்மனை, பிசாசு என சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற பல படங்களே இதற்கு உதாரணம்! இந்த வரிசையில் லேட்டஸ்ட் இணைப்பு டார்லிங் படம்.

பொங்கலையொட்டி வெளியான ஷங்கரின் ஐ மற்றும் விஷாலின் ஆம்பள படங்களுடன் டார்லிங் படமும் வெளியானது.ஐ படத்தின் வெற்றியில் டார்லிங் படம் காணாமல் போய்விடப்போகிறது என்ற கணிப்புக்கு மாறாக மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஆம்பள படம் பல தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டநிலையில், டார்லிங் படம் தற்போது 25-ஆவது நாளைக் கடந்திருக்கிறது! டார்லிங் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் ஜி.வி.பிரகாஷ்குமார் மட்டுமல்ல இப்பட குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்! அடுத்த கட்டமாக டார்லிங் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றிய பேச்சுவார்த்தையும் ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions