காமெடியனுடன் ஜோடி சேர்ந்த 'டார்லிங்' நாயகி...!

Bookmark and Share

காமெடியனுடன் ஜோடி சேர்ந்த 'டார்லிங்' நாயகி...!

பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'டார்லிங்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அந்தப் படத்தில் பேயாகவும் நடித்து பயமுறுத்தியிருந்தார். படம் வெற்றி பெற்ற பின்னும் அவருக்கு தமிழில் வேறு எந்த புதிய படங்களும் ஒப்பந்தமாகவில்லை.

அவர் நாயகியாக நடித்து முடித்த 'யாகாவாராயினும் நா காக்க' படமும் இன்னும் வெளியாகாமலே உள்ளது. மலையாளம், கன்னடத்தில் சில வெற்றிப் படங்களில் நடித்துள்ளவர் தற்போது தெலுங்குப் பக்கம் போய் அங்கு ஒரு வாய்ப்பைப் பெற்று நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான சுனில் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். படத்தில் மற்றொரு நாயகியாக 'யாருடா மகேஷ், கல்கண்டு' படங்களின் நாயகி டிம்பிள் சோப்டேவும் நடிக்க உள்ளார்.

தற்போது எந்த மொழியில் ஒரு நடிகை அறிமுகமானாலும் ஒரே மொழியில் மட்டுமே நடிக்க வாய்ப்புக்காக காத்திருப்பதில்லை. ஏதாவது, ஒரு தென்னிந்திய மொழிகளில் நடித்து தங்களை தொடர்ந்து தக்க வைக்க முயற்சித்துக் கொள்கிறார்கள். அதையே நிக்கி கல்ராணியும் செய்திருக்கிறார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions