பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி

Bookmark and Share

பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரபல டைரக்டர் தாசரி நாராயணராவ் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயது 74. தாசரி நாராயண ராவ் தெலுங்கு, இந்தி ஆகிய 2 மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார். 53 படங்களை தயாரித்தும் இருக்கிறார். 250 படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.

ஐதராபாத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த தாசரி நாராயணராவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட சிரமப்பட்டார். உடனடியாக ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்து நுரையீரலில் நோய் தொற்று இருப்பதை கண்டுபிடித்தனர்.


இதைத்தொடர்ந்து தாசரி நாராயணராவ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு நடிகர்-நடிகைகள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தனர். 


Post your comment





Related News
32 வயது நடிகர் 324 வருட மனிதராக நடிக்க வித்தியாசமான வேடம் போட்டிருக்கிறார்- புகைப்படம் பார்த்தா அசந்திடுவீங்க
மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்
முன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ்- ரசிகர்கள் உற்சாகம்
ரகசிய திருமணம், விவாகரத்து ஆனது- அதிதி ராவ்வின் மறுப்பக்கம்
காற்று வெளியிடை ரிலிஸ் குறித்து இப்படி சொன்னாரா அதிதி- மணிரத்னத்திற்கு இது தெரியுமா?
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
தனுஷின் ஹாலிவுட் படத்தில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்சனை
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions