தமிழச்சியான என்னை உள்ளே விடாமல் தகராறு செய்தனர்! பிரபல தொகுப்பாளினி டிடி கொந்தளிப்பு

Bookmark and Share

தமிழச்சியான என்னை உள்ளே விடாமல் தகராறு செய்தனர்! பிரபல தொகுப்பாளினி டிடி கொந்தளிப்பு

பிரபல டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இப்போது படங்களில் சில ரோல்களில் நடிக்கும் நடிகையாக இருப்பவர் திவ்யதர்ஷினி.

இவர் ஒரு இணையதள நேர்காணலில் பேசினார். இதில் அவர் தாம் ஒருமுறை தாஜ் மகாலை சுற்றிபார்க்க சென்ற போது வெயிலில் எனது உடல் மிகவும் சிவந்து போயிருந்தது. அங்கிருந்த காவலாளி என்னை வெளிநாட்டினர் என்று நினைத்து உன் பாஸ்போர்ட் எங்கே என கேட்டார்.

நுழைவு சீட்டு போதுமே. எதற்கு பாஸ்போர்ட் என கேட்டேன். நான் இந்தியன் என கூறினேன். இல்லை நீங்கள் 2500 ரூ கட்டவேண்டும் என கூறினார்.

ஹிந்தியில் பேசினார். எனக்கு ஹிந்தி தெரியாது என சொன்னேன். ஹிந்தி தெரியாமல் பின் எப்படி இந்தியன் என சொல்கிறீர்கள் என கேட்டார்.

உனக்கு எப்படி தமிழ் தெரியாதோ அது போல எனக்கு ஹிந்தி தெரியாது என சண்டை போட்டேன். நான் தமிழன் என சொன்னேன். பின் சில நேரம் கழித்து விட்டுவிட்டான் என டிடி பேசினார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions