ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் உண்மை காரணமா? - திடுக்கிடும் தகவல்கள்.!

Bookmark and Share

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் உண்மை காரணமா? - திடுக்கிடும் தகவல்கள்.!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்ரீ தேவி. 54 வயதான இவர் நேற்று இரவு டுபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவரது மரணம் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டு மொத்த இந்திய சினிமா துறையில் அதிர்ச்சியிலும் கடும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஜிம், யோகா, உடற்பயிற்சி, நீச்சல், டென்னிஸ் என தன்னுடைய உடலை ஆரோக்யமாக வைத்து இருந்த இவருக்கு மாரடைப்பு என்பது எவராலும் இன்னமும் நம்ப முடியவில்லை.

இவர் சமீபத்தில் தன்னுடைய மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார், சில மாதங்களுக்கு பின்னர் அவருடைய மூக்கு வீங்கியது போல தோற்றமளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

அதேபோல் இவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் போதும் அழகை மேலும் மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இவையெல்லாம் தான் ஸ்ரீ தேவியின் மரணத்திற்கு காரணமாக பலரும் சந்தேகமடைந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions