அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா

Bookmark and Share

அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போன்றே எம்.ஜி.ஆரை மேற்கோள் காண்பித்து பிரஸ் மீட் செய்தார் அவரது அண்ணன் மகள் தீபா.

சென்னை, தி.நகரிலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான தீபா.

முன்னதாக அவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

தீபா அரசியலில் குதிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஏராளமான பத்திரிகையாளர்கள் அவரது வீட்டில் குவிந்திருந்தனர். ஆனால் தீபாவோ, நான் முதல் முதலாக உரையாற்றப்போகிறேன் என கூறியபடி மைக்கை பிடித்து பத்திரிகையாளர்களுக்கு 'ஜெர்க்' ஏற்படுத்தினார். இதையடுத்து மேடையில் உரையாற்றுவதை போன்ற தோரணையுடன்தான் பேச்சை ஆரம்பித்தார். பேச்சின்போது, ஜெயலலிதாவை போன்றே சில இடங்களில் அழுத்தமாக சத்தமாக பேசினார்.

பிற இடங்களில் சாதாரணமாக பேசினார். குறிப்புகளை ஒரு காகிதத்தில் எழுதி அதை பார்த்துவாசித்தார். ஜெயலலிதாவை போலவே எம்ஜிஆரின் சினிமா பாடல் வரிகளையும் 'உரையின்போது' மேற்கோள் காட்டினார்.

"மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா, மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா" என பாடி ஏழை பங்காளனாக வாழ்ந்த மக்கள் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாளான இந்த நன்னாளில் என் வாழ்க்கையின் புது அத்தியாயத்தை தொடங்க உள்ளேன் என தீபா தெரிவித்தார். ஜெயலலிதா போலவே ஆடை மற்றும் அலங்காரமும் செய்திருந்தார் தீபா.

நிருபர்களின் ஆங்கில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பதிலளித்தார் தீபா. அப்போது அவரது உச்சரிப்பு ஸ்டைல் பக்காவாக ஜெயலலிதாவை போன்றே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராதாரவி பேட்டி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
ஜெயலலிதா தெரிந்து தான் முன்பே இப்படி அதிரடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோ
அஜித்தை பார்த்து ஜெயலலிதா கேட்ட கேள்வி! பதில் விவேகம் போஸ்டரில்
பெரிய நம்பர் நடிகையை இழுக்க இரண்டு கட்சிகள் தீவிரம்?
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
ஜெயலலிதாவை அழ வைத்த எம்.ஜி.ஆர். – நெஞ்சை உருக செய்த சம்பவம்!
32 வருட சதியை உடைத்தெறிந்த தீபா : தொண்டர்கள் உற்சாகம்! சசிகலா குடும்பத்தினர் பேரதிர்ச்சி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions