ரொமான்டிக் நடிகையான தீபா சன்னதி!

Bookmark and Share

ரொமான்டிக் நடிகையான தீபா சன்னதி!

மலையாள சினிமாவில் இருந்து நடிகைகள் கோலிவுட்டுக்கு படையெடுப்பது போன்று இப்போது கன்னட சினிமாவில் இருந்து படையெடுப்பதும் அதிகரித்து விட்டது. அந்த வகையில், குத்து ரம்யாவுக்குப் பிறகு வந்த சில நடிகைகளில் அட்டகத்தி நந்திதா தமிழில் ஒரு இடம் பிடித்து விட்டார்.

ஆனால் அதன்பிறகு வந்த அகிலா கிஷோர், அர்ச்சனா, சுஷ்மா ராஜ், தீபா சன்னதி உள்ளிட்ட சில கன்னட நடிகைகள் தமிழுக்கு வந்து நடித்து வருகின்றனர். இவர்களில், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த அகிலா கிஷோர் தற்போது மூன்றாம் உலகப்போர் படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

அடுத்தபடியாக தமிழில் படம் இல்லை. அதனால் கர்நாடகத்துக்கு ரிட்டனாகிவிட்டார். அதேபோல், சித்தார்த்துடன் எனக்குள் ஒருவன் படத்தில் நடித்த தீபா சன்னதி அடுத்தபடியாக ஆர்யா நடித்துள்ள யட்சன் படத்தில் நடித்துள்ளார்.

முதல் படத்தில் சித்தார்த்துடன் நடித்ததை விடவும் இந்த படத்தில் ஆர்யாவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.

அவரது ரொமான்ஸ் ஈடுபாட்டைப் பார்த்து அசந்து போன டைரக்டர் விஷ்ணுவர்தன் இன்னும் கூடுதலான காட்சிகளை இணைத்து ரொமான்ஸ் போர்ஷனை அதிகப்படுத்தி விட்டாராம்.  

விளைவு, இந்த படத்தில் எனது ரொமான்ஸ் நடிப்புக்காகவே அடுத்தடுத்து பல புதிய படங்கள் கமிட்டாகும் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார் தீபா சன்னதி.


Post your comment





Related News
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
32 வருட சதியை உடைத்தெறிந்த தீபா : தொண்டர்கள் உற்சாகம்! சசிகலா குடும்பத்தினர் பேரதிர்ச்சி!
ஜெயலலிதாவை ஏமாற்றியவர் சசிகலா! நடிகர் தீபன் அதிரடி
தீபாவளியில் திரைக்கு வரும் 2.o!
தீபாவளிக்கு களமிறங்கும் கத்திச்சண்டை!
தீபக்கிற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கை!
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!
ராசியில்லாத நடிகையா? தீபா சன்னதி அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions