தமிழ் படங்களில் கவனம் செலுத்த தீபா முடிவு

Bookmark and Share

தமிழ் படங்களில் கவனம் செலுத்த தீபா முடிவு

எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார் தீபா சன்னிதி. முதல் படத்திலேயே சித்தார்த்துடன் ஜோடி, இரண்டு வேடம், படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு என சந்தோஷத்தில் இருக்கிறார். இனி தமிழ் படத்தில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.

தீபாவின் சொந்த ஊரான சிக்மகளூரில் சொந்தமாக காப்பி எஸ்டேட் இருக்கிறது. அசின், நயன்தாராவுக்கு அடுத்து காப்பி எஸ்டேட் வைத்திருக்கும் நடிகை தீபா. அதனால் அவருக்கு பணம் பெரிய பிரச்சினை இல்லையாம். விதவிதமான கேரக்டர்கள்தான் வேண்டுமாம்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

எங்கள் காப்பி எஸ்டேட்டை நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதுதான் அப்பாவின் ஆசை. ஆனால் எனக்கு மீடியா மீது ஆசை. பொழுதுபோக்கிற்காக விளம்பர மாடலாக இருந்தேன்.

அதுவே சினிமாவில் கொண்டு வந்து விட்டது. சாரதி என்ற கன்னடப்படத்தில் அறிமுகமாகி நான்கு படங்களில் நடித்து விட்டேன். இப்போது எனக்குள் ஒருவன் மூலம் தமிழுக்கு வந்துவிட்டேன்.

அடுத்து ஆர்யாவுடன் யட்சன் படத்தில் நடிக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் தமிழில் புதிய முயற்சிகள் செய்யப்படுகிறது. வெரைட்டியான கேரக்டர்கள் கிடைக்கிறது. கலைக்கு மொழி தடையில்லைதான் என்றாலும் கன்னடத்தில் நிறைய நடித்து விட்டேன். இனி தமிழில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் தீபா சன்னிதி.


Post your comment





Related News
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
32 வருட சதியை உடைத்தெறிந்த தீபா : தொண்டர்கள் உற்சாகம்! சசிகலா குடும்பத்தினர் பேரதிர்ச்சி!
ஜெயலலிதாவை ஏமாற்றியவர் சசிகலா! நடிகர் தீபன் அதிரடி
தீபாவளியில் திரைக்கு வரும் 2.o!
தீபாவளிக்கு களமிறங்கும் கத்திச்சண்டை!
ரொமான்டிக் நடிகையான தீபா சன்னதி!
தீபக்கிற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கை!
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions