ஒன்மோர் டேக் கேட்கும் தீபா சன்னதி!

Bookmark and Share

ஒன்மோர் டேக் கேட்கும் தீபா சன்னதி!

கன்னடத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருக்கும் நடிகை தீபா சன்னதி. சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தில் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிததுள்ள இவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் யட்சன் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களிலுமே தீபா சன்னதி படப்பிடிப்பு தளத்தில் நடிப்பில் காட்டும் ஆர்வம் குறித்து அப்படக்குழுவினர் ஆச்சர்யமாகவும், அதே சமயம் பெருமையாகவும் பேசுகிறார்.

அப்படி என்னதான் ஆச்சர்யப்பட வைத்தார் என்று அவர்களிடம் கேட்டால், தான் நடிக்கிற ஒவ்வொரு காட்சியுமே சிறப்பாக வர வேண்டும் என்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறார் தீபா சன்னதி என்கிறார்கள்.

அதன்காரணமாக, சில காட்சிகளை டைரக்டர்களே ஓகே சொன்னாலும், தனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால், அதை ஒன்மோர் டேக்  எடுக்கலாம் சார் என்று மீண்டும் நடித்துக்கொடுக்கிறாராம் தீபா சன்னதி.

விட்டால் போதுமென்று ஓரிரு காட்சிகளில் நடித்ததுமே ஸ்பாட்டை விட்டு ஓட்டம் பிடிக்கும் இன்றைய நடிகைகளுக்கு மத்தியில் ஒன்மோர் டேக் கேட்டு வாங்கி நடிக்கும் தீபா சன்னதியைப்பற்றி சித்தார்த், ஆர்யா இருவருமே கோலிவுட்டில் பெருமையாக பேசி வருகிறார்கள்.

அதனால், கன்னட நடிகை நந்திதாவுக்கு அடுத்தபடியாக இப்போது தீபா சன்னதி மீதும் பிரபல கோலிவுட் டைரக்டர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.


Post your comment





Related News
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
32 வருட சதியை உடைத்தெறிந்த தீபா : தொண்டர்கள் உற்சாகம்! சசிகலா குடும்பத்தினர் பேரதிர்ச்சி!
ஜெயலலிதாவை ஏமாற்றியவர் சசிகலா! நடிகர் தீபன் அதிரடி
தீபாவளியில் திரைக்கு வரும் 2.o!
தீபாவளிக்கு களமிறங்கும் கத்திச்சண்டை!
ரொமான்டிக் நடிகையான தீபா சன்னதி!
தீபக்கிற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கை!
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions