ராசியில்லாத நடிகையா? தீபா சன்னதி அதிர்ச்சி

Bookmark and Share

ராசியில்லாத நடிகையா? தீபா சன்னதி அதிர்ச்சி

சித்தார்த் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் எனக்குள் ஒருவன். இந்த படத்தில் அவரைப்போலவே இரண்டு வேடங்களில் நடித்தவர் தீபா சன்னதி. கன்னட நடிகையான இவர், இந்த படம் தனக்கு தமிழில் பெரிய என்ட்ரியாக அமையும் என்று எதிர்பார்த்தார். அதோடு சிறப்பாகவும் நடித்திருந்தார்.

அதனால் அந்த படம் திரைக்கு வந்ததும் அவரது நடிப்பு கோலிவுட் பிரபலங்களால் பாராட்டு பெற்றது. ஆனால், எனக்குள் ஒருவன் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.

அதனால் ராசியில்லாத நடிகை என்று சிலர் அவர் காதுபடவே பேசிக்கொள்கிறார்களாம். அதைக்கேட்டு அப்படியென்றால் தமிழில் புதிய படங்கள் தனக்கு கிடைக்காதோ என்கிற அதிர்ச்சியில் காணப்படுகிறார் தீபாசன்னதி.

ஆனால் தற்போது ஆர்யா நடிக்கும் யட்சன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், தனது நடிப்பை புகழ்ந்து பேசிய சில பிரபல டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார்.

மேலும், தன்னை மொழி தெரியாத நடிகை என்று யாரும் ஓரங்கட்டக்கூடாது என்பதற்காக, நான் பெங்களூர் பெண்ணாக இருந்தாலும் தமிழ் நன்றாக பேசுவேன்.

அதோடு இமேஜ் பார்க்காமல் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்றாலும் அதுவாக மாறி நடிக்க தயாராக உள்ளேன் என்றும் தனது ப்ளஸ் பாய்ண்டுகளை அவர்கள் முன் வைத்து வருகிறார் தீபாசன்னதி.


Post your comment





Related News
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
32 வருட சதியை உடைத்தெறிந்த தீபா : தொண்டர்கள் உற்சாகம்! சசிகலா குடும்பத்தினர் பேரதிர்ச்சி!
ஜெயலலிதாவை ஏமாற்றியவர் சசிகலா! நடிகர் தீபன் அதிரடி
தீபாவளியில் திரைக்கு வரும் 2.o!
தீபாவளிக்கு களமிறங்கும் கத்திச்சண்டை!
ரொமான்டிக் நடிகையான தீபா சன்னதி!
தீபக்கிற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கை!
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions