ஹீரோக்கள் புராணம் பாடும் தீபா சன்னதி!

Bookmark and Share

ஹீரோக்கள் புராணம் பாடும் தீபா சன்னதி!

நந்திதா பாணியில் அரை டஜன் கன்னட படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருக்கும் இன்னொரு பெங்களூர் நடிகைதான் தீபா சன்னதி. கிளாமரே காட்டாத நந்திதாவே தமிழில் பெரிய நடிகையாகி விட்டபோது கமர்சியல் நடிகையான என்னால் முடியாதா என்ன? என்ற நம்பிக்கையோடு களமிறங்கியிருப்பவர் இவர்.

அதோடு, வந்த வேகத்திலேயே சித்தார்த்துடன் எனக்குள் ஒருவன், ஆர்யாவுடன் யட்சன் என இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதனால் இந்த படங்கள் வெளியாகும்போது தனக்கு பெரிய அளவிலான படங்கள் வரும் என்று காத்திருக்கிறார் தீபா.

மேலும், எனக்குள் ஒருவன் படத்தில் சித்தார்த்துடன் நடித்தபோது முதலில் தான் பயந்து கொண்டு நின்றதாகவும், பின்னர் தன்னிடம் நெருங்கி பழகி தனக்கான பயத்தை போக்கி சகஜமாக நடிக்க வைத்ததாகவும் சித்தார்த் பற்றி முன்பு கூறி வந்தார் தீபா சன்னதி.

அதையடுத்து இப்போது, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் யட்சன் படத்தில் நடிக்கும் அவர், ஆர்யா போன்று இதுவரை எந்த ஹீரோவும் என்னிடம் அக்கறை காட்டியதில்லை. அன்பாக பழகியதில்லை என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்.

அதைக்கேட்டு, தீபா சன்னதியுடன் மட்டுமா? எல்லா நடிகைகளுடனும் ஆர்யா, அன்பாகத்தான் பழகுவார். இதை போகப்போக தீபாவே தெரிந்து கொள்வார் என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள்.


Post your comment





Related News
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு நடிகர் ஜீவா பளீர் கேள்வி
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
அதே நுனிநாக்கு ஆங்கிலம்.. எம்.ஜி.ஆர் பாடலுடன் உரை.. ஜெயலலிதாவாகவே மாறிப்போன தீபா
32 வருட சதியை உடைத்தெறிந்த தீபா : தொண்டர்கள் உற்சாகம்! சசிகலா குடும்பத்தினர் பேரதிர்ச்சி!
ஜெயலலிதாவை ஏமாற்றியவர் சசிகலா! நடிகர் தீபன் அதிரடி
தீபாவளியில் திரைக்கு வரும் 2.o!
தீபாவளிக்கு களமிறங்கும் கத்திச்சண்டை!
ரொமான்டிக் நடிகையான தீபா சன்னதி!
தீபக்கிற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கை!
2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions