நாயகனுக்கு 'கண்டம்' ஆன விளம்பரம்

Bookmark and Share

நாயகனுக்கு 'கண்டம்' ஆன விளம்பரம்

'இவனுக்கு தண்ணில கண்டம்' என பெயர் வைத்தாலும் வைத்தார்கள், கடைசியில் படத்தில் நடித்த நாயகனுக்கே அது கண்டமாக முடிந்து விட்டது. இந்தப் படத்தில் சின்னத் திரை நடிகரான தீபக் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக நேகா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான புதிய டிரைலர் ஒன்று சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அதில் ராஜேந்திரனுக்குத்தான் அதிக முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் நகைச்சுவையாக அமைந்த அந்த டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே இன்று வெளியாகியுள்ள  இந்த படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் நாயகன் இடம் பெறாமல் ராஜேந்திரன் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

எங்கோ, ஒரு மூலையில் கூட நாயகன் தீபக் புகைப்படமோ அல்லத நாயகி நேகா புகைப்படமோ இடம் பெறவேயில்லை. சமீப காலமாக ராஜேந்திரன் நகைச்சுவை நடிப்பிற்கு மாறிய பின் அவரை ரசிகர்களும் அதிகம் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சமீபத்தில் வந்த 'டார்லிங்' படத்தில் கூட ராஜேந்திரன் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அப்படியிருக்க 'தண்ணில கண்டம்' படத்தின் நாயகன் தீபக்கை படத்தின் தலைப்பிற்கேற்றபடி கண்டமாக்கி படத்தைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார்கள்.

இன்றைய விளம்பரங்களில் “பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, டார்லிங்” ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மொட்டை ராஜேந்திரனின் நடிப்பில் என்றுதான் விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் படத்தில் இடைவேளைக்குப் பிறகுதான் ராஜேந்திரன் வருகிறாராம். படத்துலதான் எதிர்பாராம வில்லன் என்ட்ரி கொடுப்பார் என பார்த்தால், விளம்பரத்திலும் ராஜேந்திரன் இப்படி என்ட்ரி கொடுத்து விட்டாரே...


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions