ஆணும், பெண்ணும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும்-தீபிகா படுகோனே!

Bookmark and Share

ஆணும், பெண்ணும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும்-தீபிகா படுகோனே!

பாலிவுட் கதாநாயகளில் பிரபலமானவர் தீபிகா படுகோனே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த தீபிகா தற்போது அந்நோயில் இருந்து எப்படி வெளி வந்தார் என்பதை அவரது பேஸ்புக் அபிமானிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டது ;- இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன். அந்த நிலையில் இருந்து வெளியேற கடுமையாக போராடினேன். எனது அப்போதைய நிலையை போராடி வெல்லும் பலத்தை எனக்குள் இருந்த ஒரு விளையாட்டு வீராங்கனைக்குரிய ஆற்றல் ஊக்குசக்தியாக அமைந்தது. பேட்மின்டன் விளையாட்டு தெரிந்திருந்ததால் தோல்விகளை கையாள மட்டுமின்றி, வெற்றியை கையாள்வது எப்படி என்பதையும் விளையாட்டு கற்றுத் தந்தது. எனக்கு பணிவையும், அடக்கத்தையும் அது கற்றுத் தந்தது.

எந்த நிலையிலும் இருந்து மீள்வது எப்படி? எதையும் எதிர்த்து போராடுவது எப்படி? என்பதை கற்றுத் தந்ததுடன் அந்த ஊக்கம்தான் என்னை வழிநடத்தி செல்கிறது. ஒவ்வொரு இளைஞரும், இளம்பெண்ணும், ஆணும், பெண்ணும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். எனது வாழ்க்கையை மாற்றிய விளையாட்டு உங்களது வாழ்க்கையையும் மாற்றும்.என்று கூறிவுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions