எப்போதும் சுயமாகத்தான் முடிவெடுப்பேன்- தீபிகா படுகோனே!

Bookmark and Share

 எப்போதும் சுயமாகத்தான் முடிவெடுப்பேன்- தீபிகா படுகோனே!

இந்த ஆண்டு தீபிகா படுகோனே நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் படங்களாகவே அமைந்தன. கடந்த வாரம் இவரது நடிப்பில் வெளியான ‘பாஜிராவ் மஸ்தானி’ படமும் வசூலில் ரூ.100 கோடியை தொட்டுள்ளது. 

இதுகுறித்து  பேசிய தீபிகா படுகோனே, “2015–ம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. 2013–ம் ஆண்டு எனக்கு நல்ல ஆண்டாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 3 சிறப்பு வெளியீடுகள், பல அருமையான நினைவுகள் என்று மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. 

நான் எந்த படத்தில் நடித்தாலும், டைரக்டர் கதையை சொல்லும் போது அது எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். வேறு யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நான் தான் முடிவு எடுப்பேன். பிறர் முடிவுகளை நம்பி ஏற்க மாட்டேன். என் படம் எவ்வளவு வசூல் என்று மட்டும் நான் பார்ப்பது இல்லை. 

ஒரு படம் எத்தனை கோடி வசூலிக்கிறது என்பதை வைத்து அதன் வெற்றியை முடிவு செய்வது வருத்தம் அளிக்கிறது. என தங்கை என் படங்களைப்பற்றி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என விமர்சிப்பார்.

குடும்பத்தினர் அருகில் இருந்தாலும் சரியான கருத்துக்களை சொல்வார். எந்த படத்தில் நடிப்பது என்பதை நான் தான் முடிவு செய்வேன்” என்று அவர் கூறினார்.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions