யூடியூபில் ஹிட்டான தீபிகா படுகோனேவின் மை சாய்ஸ் : 2 நாளில் 20 லட்சம் பேர் பார்த்தனர்

Bookmark and Share

யூடியூபில் ஹிட்டான தீபிகா படுகோனேவின் மை சாய்ஸ் : 2 நாளில் 20 லட்சம் பேர் பார்த்தனர்

மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல், பாலிவுட்டில் தனக்கென்று தனித்த அடையாளம் கொண்டவர் தீபிகா படுகோனே. சமூகத்தில் பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் இவர் மும்பையில் உள்ள 98 பெண்களுடன் இணைந்து நடித்துள்ள குறும்படமே ’மை சாய்ஸ்’.

இந்த 2.35 நிமிட வீடியோதான் யூடியூப், ட்விட்டர் என்று அனைத்து சமூக வலைதளங்களிலும் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. வண்ணங்களற்ற பெண்களின் வாழ்வை சித்தரிக்கும் வகையில் இந்த குறும்படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரும் பெண்கள் அனைவரும் கருப்பு நிற ஆடைகளை மட்டுமே அணிந்திருக்கின்றனர்.

ஆண்களே!! பெண்களைப் பற்றிய உங்கள் குறுகிய சிந்தனையை மாற்றிக் கொள்ளுங்கள், அணியும் ஆடை, பார்க்கும் உத்தியோகம், வாழும் வாழ்க்கை இதை வைத்து ஒரு பெண்ணைப் பற்றி தீர்மானிப்பதை நிறுத்துங்கள் என்பதே இந்த குறும்படம் வைக்கும் வேண்டுகோள்.

தன் நீண்ட கூந்தல் காற்றில் அலைந்தாட குறும்படத்தில் கம்பீர தோற்றமளிக்கும் தீபிகா “எனக்கு பிடித்த மாதிரிதான் நான் உடை அணிய முடியும். என்னுடைய உடல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? நான் ஒரு சாதாரண பெண்ணா? இல்லை லெஸ்பியனா? என்று என் வாழ்க்கை முழுவதும் என்னுடைய சுய தேர்வின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்” என்கிறார்.

தீபிகா படுகோனின் நடிப்பில் ‘காக்டெயில்’, ’பைண்டிங் பேன்னி’ போன்ற படங்களை இயக்கிய ஹோமி அட்ஜானியா, இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார். இதுவரை 2 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ, ஸ்டேட்ஸ், ட்வீட் என்று பலரது கடும் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions