மாதுரி தீட்சித்-ஐஸ்வர்யா ராயை மிஞ்சுவார்களா தீபிகா-பிரியங்கா?

Bookmark and Share

மாதுரி தீட்சித்-ஐஸ்வர்யா ராயை மிஞ்சுவார்களா தீபிகா-பிரியங்கா?

இந்தி சினிமாவின் பிரபல இயக்குனர் சஞ்சய் பன்சாலி. ‘தேவ்தாஸ்’, ‘பிளாக்‘, ‘ராம்லீலா’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தந்தவர். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘ராம்லீலா’ படத்திற்கு பிறகு தற்போது ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் பிரியங்கா சோப்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் தீபிகா படுகோனவும், பிரியங்கா சோப்ராவும் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடவிருப்பதாக, பிரியங்கா சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ஏற்கெனவே சஞ்சய் பன்சாலி இயக்கத்தில் வெளிவந்த ‘தேவ்தாஸ்’ படத்தில் மாதுரி தீட்சித்-ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார்கள். இந்த பாடல் இந்திய அளவில் பெரிய வரவேற்பு பெற்றது. அதுபோல், இந்த படத்தில் இருவரும் இணைந்து ஆடும் இந்த பாடல் பெரிய அளவில் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, சஞ்சய் பன்சாலி படங்களில் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெறும். அதை காட்சிப்படுத்தும் விதத்திலும், நடனம் அமைக்கும் விதத்திலும் ஒவ்வொரு பாடல்களும் பேசப்படும் பாடல்களாக இருக்கும்.

அதிலும், இந்த படத்தில் நடனமாடவிருக்கும் தீபிகா படுகோனவும், பிரியங்கா சோப்ராவும் நன்றாக நடனம் ஆடக்கூடியவர்கள். இந்த கூடுதல் தகுதி இருப்பதால் இந்த பாடல் கண்டிப்பாக இந்திய அளவில் பேசப்படும் பாடலாக அமையும் என்பது மட்டும் உறுதி. 

 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions