மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே

Bookmark and Share

மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே

ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

பத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக வந்து மேலும் பிரபலமானார். இந்த படத்தில் சர்ச்சைகளையும் சந்தித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் சில நாட்கள் போலீஸ் பாதுகாப்பும் அளித்தனர். 

இப்போது ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் அவருக்கு காதலும் வந்துள்ளது. இருவருக்கும் இத்தாலியில் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளதாகவும் திருமண ஏற்பாடுகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிரிப்பிள் எக்ஸ் ஹாலிவுட் படத்தில் நடித்து இருந்த தீபிகா படுகோனே அதன் அடுத்த பாகத்திலும் இப்போது நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குனர் டி.ஜே.கருசோ வெளியிட்டு உள்ளார். சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேள்விக்கு பதில் அளித்தபோது இதனை அவர் தெரிவித்தார்.

வின்டீசல், சாமுவேல் ஜாக்சன், டோனி யென் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. பிரியங்கா சோப்ராவும் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்துக்காக இந்தியில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
8 தோட்டாக்கள் டீமின் அடுத்த படைப்பு ஜீவி
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவி மரணத்திற்கு துபாய் ஓட்டல் தான் காரணமா? - விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions