ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோன்? பரபரக்கும் பாலிவுட்!

Bookmark and Share

ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோன்? பரபரக்கும் பாலிவுட்!

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே,

ஹாலிவுட் நடிகரான வின் டீசல் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக சினிமா உலகில் செய்தி ஒன்று வலம் வந்து கொண்டிருக்கின்றது.

பாலிவுட்டில் 100 கோடிக்கு மேல் வசூல்களை குவித்த பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் தற்சமயம் நடித்து வெளியான தமாஷா படமும் ஹிந்தியில் சக்கைப் போடு போட்டு வருகின்றது.

இந்நிலையில் ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் ஸ்டாரான வின் டீசலுடன் ஹாலிவுட் படமொன்றில் தீபிகா நடிக்க உள்ளார் என்கின்ற தகவல் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் உள்ளாக்கியுள்ளது.

தமாஷா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பிறகு அமெரிக்காவிற்கு சென்றுள்ள தீபிகா அங்கு வின்னை சந்தித்துள்ளார். இந்நிலையில் அவருடன் நடிக்க இருக்கும் படத்தின் பேச்சுவார்த்தைக்குதான் தீபிகா அங்கு சென்றார் என்று செய்திகள் பரவி வருகின்றன.

மேலும், இதை உறுதிப் படுத்தும் வகையில் தீபிகாவும், வின் டீசலும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. எனினும், அந்த போட்டோவினை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தீபிகா இதுகுறித்து இன்னும் உறுதி படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions