பரபரப்பான பாலிவுட்டை இதமாக மாற்றிய 'தீபிகா படுகோனே '

Bookmark and Share

பரபரப்பான பாலிவுட்டை இதமாக மாற்றிய 'தீபிகா படுகோனே '

பாலிவுட்டே நடிகர் சல்மான் கானின் வழக்கால் தடதடத்துக் கிடக்கும் இந்த நேரத்தில் பிக்கு படம் வெளிவந்துள்ளது. நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகர் இர்பான் கான் இவர்களுடன் நடிகர் அக்சய் ஓபராய் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடித்து இருக்கிறார்.

சுஜித் சிர்கார் இயக்கி இருக்கும் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஜூகி சதுர்வேதி எழுத அனுபம் ராய் இசை அமைப்பில் படம் வெளிவந்துள்ளது. நடிகை தீபிகா இதில் நடிகர் அமிதாப் பச்சனின் மகளாக நடித்து இருக்கிறார். தீபிகாவுக்கு ஜோடி நடிகர் இர்பான் கான்.

கதை பெங்காலில் நடப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. தந்தையாக அமிதாப் பச்சனும் அவரது மகளாக தீபிகாவும் நடித்துள்ளனர். நகைச்சுவையை பின்னணியாகக் கொண்டு படம் எடுக்கப் பட்டுள்ளது.

பிக்கு என்ற கேரக்டரில் நடிகை தீபிகா ஆபீசில் வேலை செய்து கொண்டே குடும்பத்தைக் கவனிக்கும் பெண்ணாக நடித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 100 கோடி படங்களின் நடிகை தீபிகாவுடன் நடிகர் இர்பான் கானும் இணைந்து நடித்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

இந்தி திரை உலகில் அறிமுகமான புதிதில் ஆரஷன் படத்தில் அமிதாப் மகளாக நடித்து இருந்தார். மீண்டும் பல வருடங்கள் கழித்து முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே மறுபடியும் அமிதாப்பின் மகளாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா?
என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions