ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்

Bookmark and Share

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் - தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், திருமண ஏற்பாடுகளில் இருவீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் திருமண பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் அச்சடித்தல், திருமணத்துக்கு அழைக்க வேண்டியவர்கள் பட்டியல் தயாரித்தல், வரவேற்புகளை கவனித்தல், ஓட்டலில் தங்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட ஒவ்வொரு பணிக்கும் ஆட்களை நியமித்து வருகிறார்கள்.

இத்தாலியில் இவர்களது திருமணம் நடக்கிறது. விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்ட அதே ஓட்டலில், ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணமும் நடக்க உள்ளது.

மும்பையில் இருந்து இருவீட்டாரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தனி விமானம் மூலம் இத்தாலிக்கு செல்கிறார்கள். திருமணத்துக்கு முன்பாக இருவரும் கைவசம் இருக்கும் படங்களை விரைவாக முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.

இவர்களது நடிப்பில் கடைசியாக வெளியான பத்மாவத் படம் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூலைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions