XXX ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படம் எப்படி, நம்பி போலாமா?

Bookmark and Share

XXX ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் படம் எப்படி, நம்பி போலாமா?

ஹாலிவுட் படங்கள் என்றாலே ஆக்‌ஷன், அனிமேஷன் என பட்டையை கிளப்பு. அதிலு இந்த XXX சீரியஸ் ரசிகர்களிடம் மிகவும் பேமஸ். வின் டீசல் இந்த பாகத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்தாலும், இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு நடிகர் நடித்திருந்தார்.

தற்போது மூன்றாவது பாகத்தில் வின் டீசர் ரிட்டர்ன் ஆகியுள்ளார், படத்தின் கதை என்னவென்றால் வானில் இருக்கும் செயற்கைகோள் ஒன்று எரிந்து பூமியில் விழுகின்றது. இந்த செயற்கைகோளை ஒரு கருவி மூலமாக விழ வைக்கின்றனர்.

இது எப்படி விழுந்தது, இதை விழ வைத்த கருவி எது என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்த, மர்ம நபர் ஒருவர் அந்த கருவியை திருடி செல்கின்றார், பிறகு அந்த நபரையும், கருவியையும் கண்டுப்பிடிக்கும் வேலை வின் டீசல் கையில் வருகிறது, அவர் எப்படி அதை கண்டிப்பிடித்தார் என்பதே மீதிக்கதை.

வின் டீசல் ஏற்கனவே பல ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம், சண்டைக்காட்சிகளில் மிரட்டுவார், அப்படித்தான் இந்த படத்திலும் சண்டைக்காட்சிகளில் தூள் கிளப்புகின்றார்.

படத்தின் காட்சிகள் ஏதும் நம்பத்தகுந்தப்படி இல்லை என்றாலும், டெக்னிக்கலாக மிரட்டியுள்ளனர். தீபிகா படுகோனும் ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைகிளப்பியுள்ளார்.

அதிலும் அந்த ஸ்கேட்டிங் சண்டை எல்லாம் மிரட்டியுள்ளனர். மொத்தத்தில் XXX ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் ஆக்‌ஷன் பிரியர்களுக்கு அறுசுவை விருந்து.


Post your comment





Related News
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions