டெல்லி கணேஷை பயமுறுத்தும் நட்பு வட்டாரம்!

Bookmark and Share

டெல்லி கணேஷை பயமுறுத்தும் நட்பு வட்டாரம்!

தமிழ் சினிமாவில் உள்ள யதார்த்தமான குணசித்ர நடிகர்களில் டெல்லி கணேஷ் குறிப்பிடத்தக்கவர். சமீபத்தில்கூட சென்னை எக்ஸ்பிரஸ் இந்தி படத்தில் நடித்திருந்த அவர், கல்யாண சமையல் சாதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஜிகர்தாண்டா, சண்டமாருதம் என தொடர்ந்து பிசியாகவே நடித்துக்கொண்டிருப்பவர்.

இந்த நிலையில், எல்லா நடிகர்களையும் போலவே இவருக்கும் தனது வாரிசு மகாதேவனையும் சினிமாவில் ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால் தனக்கு நெருக்கமான சில பட நிறுவனங்களிடம், மகனை ஹீரோவாக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்கு யாருமே செவிசாய்க்கவில்லை. அதனால். இப்போது மகனை ஹீரோவாக்க தானே தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் டெல்லி கணேஷ். அதற்காக தான் சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதறகு வாடகைக்கு விட்டு வந்த ஒரு வீட்டை தற்போது விற்று விட்டார்.

அதோடு பிரமாண்டத்தை நம்பாமல் கதையை நம்பி படமெடுக்க வேண்டும் என்று குறைந்த முதலீட்டு கதைகளாக கேட்டு வந்த டெல்லி கணேஷிடம், டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணா சொன்ன கதை பிடித்து விட்டதால் டபுள் ஓகே சொல்லி விட்டார் டெல்லி கணேஷ்.

ஆனால், அவர் திடுதிப்பென்று தயாரிப்பாளராகியிருப்பதைப்பார்த்த அவருக்கு நெருக்கமான சில நண்பர்கள், சினிமாவைப்பற்றி தெரிந்துமா இப்படி சொந்த காசை போட்டு படமெடுக்கிறீர்கள்? என்று அவரை அச்சுறுத்தும் வகையில் கேட்கிறார்களாம்.

அதற்கு, என் மகனை வைத்து நானே ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் வேறு யார் எடுப்பார்கள்? என்று அவர்களிடம் கேட்கும் டெல்லிகணேஷ், சினிமாவில் இத்தனை ஆண்டு காலம் இருக்கும் நான் எனது அனுபவத்தைக்கொண்டு இந்த படத்தை எடுக்கிறேன்.

சினிமா மீது முழு நம்பிக்கை வைத்தால் கைவிடாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால் கண்டிப்பாக இதில் வெற்றி பெறுவேன் என்று கட்டை விரலை உயர்த்திக்காட்டுகிறாராம்.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அதர்வாவுக்கு அடித்த ஜாக்பாட், அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions