மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் டெல்லி கணேஷ்

Bookmark and Share

மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் டெல்லி கணேஷ்

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மகன் மகா. இவர் ‘என்னுள் ஆயிரம்’ படத்தில் கதாநாயகன் ஆகிறார்.

இந்த படத்தை தனது மகனுக்காக டெல்லி கணேஷ் தயாரிக்கிறார். இதுகுறித்து டெல்லி கணேஷ் கூறியதாவது:–

என் மகனை ஹீரோ ஆக்க வேண்டும் என்பதற்காக பல கதைகளை கேட்டேன். அப்போது இயக்குனர் ஏ.எஸ்.விஜய் இடம் உதவி இயக்குனராக 6 படங்களில் பணியாற்றியுள்ள கிருஷ்ணகுமார், எனது மகனிடம் ஒரு கதையை கூறி இருக்கிறார். அது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

நானும் அந்த கதையை கேட்டேன் என் மகன் நடிப்பதற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். அந்த கதை வித்தியாசமாக இருந்தது. எனவே, அதை படமாக எடுத்து என் மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்ய நினைத்தேன்.

என் மகனை வைத்து சிலர் படம் தயாரிக்க முன் வந்தனர். என்றாலும் டைரக்டர்களையும் அழைத்து வந்தனர். எனவே நானே தயாரிப்பது என்று முடிவு செய்தேன். படப்பிடிப்பின் போது நேரில் சென்று பார்த்தேன். அவர் சிறப்பாக நடிக்கிறார். இந்த படத்தை கதையை சொன்ன கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.

அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த மரீனா நடிக்கிறார். இவர் தனது தாயாருடன் என் வீட்டில் உள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கி இருந்து நடித்தார். படப்பிடிப்பு முடிந்ததும் தனது தாயாருடன் வந்து என்னையும், என் மனைவியையும் காலைத் தொட்டு வணங்கி மரியாதை செய்தார். இந்த படத்தில் பொருத்தமான வேடம் அமையாததால் நான் நடிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
ராகவேந்திரா படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது: டெல்லி கணேஷ் பேட்டி
சமூக வலைதலத்தில் வலம் வரும் டெல்லி கணேஷின் பரபரப்பான ஆடியோ!
கான் மார்க்கெட் என்ற பெயரை கைவிடுங்கள்: சல்மான்கான் வலியுறுத்தல்
டெல்லி கணேஷை பயமுறுத்தும் நட்பு வட்டாரம்!
வீட்டை விற்று என் மகனை வைத்து படம் எடுத்துள்ளேன்: நடிகர் டெல்லி கணேஷ் பேட்டி
மாற்றுத் திறனாளிகளின் துயரத்தை விளக்கும் சர்வதேசப் படவிழா: டெல்லியில் 24-ம் தேதி தொடக்கம்
டெல்லி கணேஷ் மகனும் நடிக்க வருகிறார்
பவரோட மோசடி பவர் டெல்லி வரைக்கும்...
பதினெட்டு காமெடியர்களுடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் - கோப்பெருந்தேவி!
பிரபல நடிகர் டெல்லிகணேஷ் திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions