ஹீரோயினே இல்லாத டிமான்ட்டி காலனி

Bookmark and Share

ஹீரோயினே இல்லாத டிமான்ட்டி காலனி

ஹீரோயினே இல்லாத ஒரு படமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியருக்கிறது நேற்று வெளியான டிமான்ட்டி காலனி ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவருடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் மட்டுமே படத்தில் அதிக நேரம் வரும் நடிகர்களாக இருக்கிறார்கள். வில்லனாக நடித்துள்ள அன்டில் ஜாஸ்கெலினன் கூட ஒரு சில காட்சிகளில்தான் நடித்திருக்கிறார்.

படத்தில் மருந்துக்குக் கூட பெண்கள் இல்லாமல் போகக் கூடாது என்பதற்காக ஒரே ஒரு காட்சியில் மட்டும் நகைச்சுவை நடிகை மதுமிதா நடித்திருக்கிறார். மற்றபடி படத்தில் வேறு எந்தக் காட்சியிலும் சில நிமிடங்கள் இடம் பெறும்படியாக எந்த பெண்களுமே இல்லை. வில்லனின் மனைவியாக வரும் நடிகையைக் கூட ஒரு சில வினாடிகள் மட்டுமே காட்டுகிறார்கள்.

இந்தக் காலத்தில் இப்படி பெண்களும் இல்லாமல், ஹீரோயினும் இல்லாமல் ஒரு படமா என ஆச்சரியப்பட வைத்துள்ளது இந்தப் படம்.


Post your comment





Related News
கெளதம் மேனனை ரீ பிளேஸ் செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்!
டிமான்ட்டி காலனி ஆந்திராவில் ரிலீஸ்..!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்
2015ம் ஆண்டின் மூன்றாவது பேய்ப்பட வெற்றி
கமரகட்டு, டிமான்ட்டி காலனி படங்களில் ஆண் பேய்கள்!
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
பாலிவுட் செல்கிறது 7 ஜி ரெயின்போ காலனி
ஹீரோயின் பேரைச் சொல்லாமலேயே... திகில் கிளப்ப வரும் ‘டிமாண்டி காலனி’!
நயன்தாரா நடித்த பேய் படம் மாயாவை வாங்கியது ராம நாராயணன் நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions