டிமான்ட்டி காலனி ஆந்திராவில் ரிலீஸ்..!

Bookmark and Share

டிமான்ட்டி காலனி ஆந்திராவில் ரிலீஸ்..!

அருள்நிதி நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான ஹாரர் படம் டிமான்ட்டி காலனி. தனது மோகனா மூவீஸ் சார்பில் அருள்நிதி தயாரித்த இந்தப்படத்தை தமிழகம் முழுக்க ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ் வெளியிட்டது.

ரசிகர்களின் பல்ஸ் அறிந்து மிகச்சரியான படங்களை வாங்கி வெளியிட்டு வெற்றியடைந்து வரும் ராமநாராயணனின் மகன் முரளியின் கணிப்பு டிமான்ட்டி காலனி படத்திலும் சரியாக இருந்தது. டிமான்ட்டி காலனி படம் மற்ற ஹாரர் படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது.

படம் வெளியாகி பல வாரங்களாகியும் இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் டிமான்ட்டி காலனி படம் தமிழில் வெற்றியடைந்ததினால் தெலுங்கில் டப் செய்யத் தொடங்கினர்.

இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 116 தியேட்டர்களில் டிமான்ட்டி காலனி படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாகிறது. இந்தப் படம் வெற்றியடைந்தால் அருள்நிதி நடித்து இன்று வெளியாகும் நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் படமும் தெலுங்குக்குப் போகும் என்று நம்பலாம். 

 


Post your comment





Related News
கெளதம் மேனனை ரீ பிளேஸ் செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்
2015ம் ஆண்டின் மூன்றாவது பேய்ப்பட வெற்றி
ஹீரோயினே இல்லாத டிமான்ட்டி காலனி
கமரகட்டு, டிமான்ட்டி காலனி படங்களில் ஆண் பேய்கள்!
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
பாலிவுட் செல்கிறது 7 ஜி ரெயின்போ காலனி
ஹீரோயின் பேரைச் சொல்லாமலேயே... திகில் கிளப்ப வரும் ‘டிமாண்டி காலனி’!
நயன்தாரா நடித்த பேய் படம் மாயாவை வாங்கியது ராம நாராயணன் நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions