2015ம் ஆண்டின் மூன்றாவது பேய்ப்பட வெற்றி

Bookmark and Share

2015ம் ஆண்டின் மூன்றாவது பேய்ப்பட வெற்றி

2015ம் ஆண்டில் எதிர்பாராமல் பெரிய வெற்றி பெற்ற படங்களில் மூன்று பேய்ப் படங்கள் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

2015ம் ஆண்டு ஆரம்பித்து சுமார் ஐந்து மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபகரமான படங்களாக மூன்று பேய்ப் படங்கள் அமைந்துள்ளன.

பொங்கலுக்கு வெளிவந்த 'டார்லிங்', ஏப்ரல் 17ம் தேதி வெளிவந்த 'காஞ்சனா 2', கடந்த வாரம் வெளிவந்த 'டிமான்ட்டி காலனி' ஆகிய மூன்று பேய்ப் படங்களும் எதிர்பார்ப்புகளை மீறி வெற்றிப் படங்களாக அமைந்துள்ளதென கோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

'டார்லிங்' படம் “ஐ, ஆம்பள” படங்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றது. 'காஞ்சனா 2' படம் மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' படத்துடன் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 'டிமான்ட்டி காலனி' படம் வெளிவருவதற்கு முன் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் பெரிய விளம்பரம் இல்லாமல் திடீரென வெளிவந்தது.

கடந்த வாரம் மேலும் ஆறு படங்களுடன் வெளிவந்த இந்தப் படம் வேறு எந்தப் படமும் சரியாக இல்லாத காரணத்தால் வெற்றி பெற்றது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் 'மாசு என்கிற மாசிலாமணி' படம் மூலம் மீண்டும் பேய் ரிலீஸ் தொடர்கிறது.


Post your comment





Related News
கெளதம் மேனனை ரீ பிளேஸ் செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்!
டிமான்ட்டி காலனி ஆந்திராவில் ரிலீஸ்..!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்
ஹீரோயினே இல்லாத டிமான்ட்டி காலனி
கமரகட்டு, டிமான்ட்டி காலனி படங்களில் ஆண் பேய்கள்!
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
பாலிவுட் செல்கிறது 7 ஜி ரெயின்போ காலனி
ஹீரோயின் பேரைச் சொல்லாமலேயே... திகில் கிளப்ப வரும் ‘டிமாண்டி காலனி’!
நயன்தாரா நடித்த பேய் படம் மாயாவை வாங்கியது ராம நாராயணன் நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions