ஹீரோயின் பேரைச் சொல்லாமலேயே... திகில் கிளப்ப வரும் ‘டிமாண்டி காலனி’!

Bookmark and Share

ஹீரோயின் பேரைச் சொல்லாமலேயே... திகில் கிளப்ப வரும் ‘டிமாண்டி காலனி’!

வம்சம், மௌனகுரு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்த அருள்நிதியின் ஏழாவது படம் தான் டிமாண்டி காலனி. 19ம் நூற்றாண்டில் சென்னை ஆழ்வார் பேட்டையில் நடந்த திகில் சம்பவங்களை தொகுத்து, திருப்பங்கள் நிறைந்த படமாக டிமாண்டி காலனியை உருவாக்கி வருகிறார் அஜய்ஞானமுத்து.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடன் உதவியாளராக இருந்த அஜய்ஞானமுத்துவின் முதல்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மதுமிதா, திலக் ஜனத், எம்.எஸ்.பாஸ்கர், அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நாயகியின் பெயரை மட்டும் இன்னமும் அறிவிக்காமல், படக்குழு சஸ்பென்சாக வைத்துள்ளது.பிரபல கிதார் இசைக்கலைஞரான கேபாஜெரேமியா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

அரிமாநம்பி, கணிதன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய யுவன் ஸ்ரீனிவாஸ் இப்படத்திற்கு படத்தொகுப்பு.இப்படத்தில் பிரபல இசையமைப்பாளர்களான அனிருத்தும், டி.இமானும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர்.

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.19ம் நூற்றாண்டில் இருந்தது போல் சென்னையில் உள்ள லஸ்கார்னர், பட்டினப்பாக்கம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸும், மோகனா மூவிசும் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், பின்னணி இசைக்கோர்ப்பு உள்ளிட்ட மற்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன.

சமீபகாலமாக வித்தியாசமான பேய்ப்படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், அருள்நிதியின் டிமாண்டி காலனியும் திகில் கிளப்பத் தயாராகி வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Post your comment





Related News
கெளதம் மேனனை ரீ பிளேஸ் செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்!
டிமான்ட்டி காலனி ஆந்திராவில் ரிலீஸ்..!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்
2015ம் ஆண்டின் மூன்றாவது பேய்ப்பட வெற்றி
ஹீரோயினே இல்லாத டிமான்ட்டி காலனி
கமரகட்டு, டிமான்ட்டி காலனி படங்களில் ஆண் பேய்கள்!
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
பாலிவுட் செல்கிறது 7 ஜி ரெயின்போ காலனி
நயன்தாரா நடித்த பேய் படம் மாயாவை வாங்கியது ராம நாராயணன் நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions