ரசித்து பாடிய தேவா!

Bookmark and Share

ரசித்து பாடிய தேவா!

சினிமாவில் பிசியாக இருந்த காலத்தில் வருடத்துக்கு 30, 40 படங்கள் வரை இசையமைத்தவர் தேவா. அந்த வகையில் மெகா பட்ஜெட் படங்களெல்லாம் இளையராஜா பக்கம் செல்ல, மினிமம் பட்ஜெட் படங்கள் எல்லாமே தேவாவிடம்தான் சென்றன.

அதனால் அவரது இசைக்கூடமான பிரசாத் ஸ்டுடியோவில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், அப்படி பிசியாக இருந்த தேவாவுக்கு சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லை.

என்றாலும், தனது வாரிசு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் படங்களில் தானும் பங்கேற்று வருகிறார். அதோடு, யாராவது இசையமைப்பாளர்கள் பின்னணி பாட அழைத்தாலும் உடனே சென்று பாடிக்கொடுக்கிறார் தேவா.

அந்தவகையில், சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தில் அனிருத் இசையில் ஸரி ஸரி ஸரிகம பதநிஸரி -என்ற பாடலை அனிருத், கானா பாலாவுடன் இணைந்து பாடினார்.

அதேபோல் இப்போது வந்தாமலை என்ற படத்திற்காகவும் ஷாம் டி.ராஜ் இசையில் ஒரு கானா பாடல் பாடியிருக்கிறார் தேவா.  இந்த பாடலை அவர் பாடியதை ஒரே டேக்கில் இசையமைப்பாளர் ஓகே சொல்லிவிட்டபோதும், விடவில்லையாம் தேவா.

எனக்கு இன்னும் திருப்தி வரவில்லை என்று சொல்லி பலதடவை ரீடேக் வாங்கி திரும்பத்திரும்ப பாடினாராம். தேவாவின் இந்த ஈடுபாட்டை அப்படக்குழுவே பெருமையாக பேசுகிறார்கள்.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions