பொதுமக்கள் உதவியில் நடந்த 'தேவதாஸ் பிரதர்ஸ்' படப்பிடிப்பு!

Bookmark and Share

பொதுமக்கள் உதவியில் நடந்த 'தேவதாஸ் பிரதர்ஸ்' படப்பிடிப்பு!

காதல் பற்றிய கருத்தும்  புரிதலும் காதலுக்கான அணுகுமுறையும்  காலத்துக்கேற்ப மாறி வருபவை. 

இப்போதைய 2015 காலக் கட்டத்தில் இளைஞர்கள் காதலை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? இன்று என்னமாதிரி புரிதலுடன்  காதல் இருக்கிறது?  என்பதை அலசுகிற படம்தான் 'தேவதாஸ் பிரதர்ஸ்'.

கதாநாயகனாக துருவா நடிக்கிறார்.​ ​கவனிக்கப்படும் அடுத்தக் கட்ட நாயகர்கள் வரிசையில் துருவாவை​க்​  கொண்டுபோய் சேர்க்கும் படமாக இதை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது எக்ஸட்ரா எண்டர் டெய்ன்மெண்ட்.

இப்படத்தை கே. ஜானகிராமன் இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் சற்குணம், ஐஸ்வர்யா தனுஷ், வேல்ராஜ் ஆகியோரிடம் சினிமா பயின்றவர். 

துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், 'மெட்ராஸ்' ஹரிகிருஷ்ணன் என 4 பேர் நாயகர்கள். அறிந்த முகம் சஞ்சிதா ஷெட்டியுடன், அறிமுகங்கள் ஷில்பா ஷெட்டி, தீப்தி மன்னே, ஆரா   என 4 பேர்  நாயகிகள்.  

மயில்சாமி, ரோபோ சங்கர் படத்தை கலகலப்பாக்குகின்றனர். கே. கே. நகரில் உள்ள துருவா, யானைக்கவுனியில் இருக்கும் 'மெட்ராஸ்' ஹரிகிருஷ்ணன், பெசண்ட் நகரில் இருக்கும் அஜய் கிருஷ்ணன்,  தஞ்சாவூரில் உள்ள பாலசரவணன் என நான்கு விதமான வர்க்க அடுக்குகளில் இருக்கும் நான்கு  இளைஞர்கள் மற்றும் அவர்களின் காதலைச் சொல்கிறது கதை.

ஒருபக்கம் படக்கதை வேறுபட்ட விதம் என்றால், அதை படமாக்கிய போது சந்தித்த அனுபவம் இயக்குநருக்கு இன்னொரு பக்கம் மாறுபட்ட அனுபவமாக இருந்திருக்கிறது.

யானைக்கவுனியில் கூட்டத்தில் படம் பிடித்தது சுவையானது, பதற்றமானது,  கடினமானது என இயக்குநருக்குப் பல அனுபவங்களின் கலவையாக இருந்துள்ளது.

யானைக்கவுனியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இப்படத்தில்  நடித்துள்ளனர். சில கப்பம் வாங்குபவர்கள் வந்து பிரச்சனை பண்ணி​யுள்ள​னர். முதல் படம் பண்ணுவது நிறைய பயத்தோடும் கவனத்தோடும் செய்ய வேண்டும்.

தயாரிப்பாளர் கொடுத்திருக்கும் பட்ஜெட் அனுமதியுடன் பயணிக்கும் கட்டாயம் ஒவ்வொரு புதுஇயக்குனருக்கும் இருக்கும். இதில் அந்தந்த பகுதியில் உள்ள சமூக விரோதிகளின் இடையூறு வந்தால் எப்படி சமாளிக்க? பெரிய இயக்குனர்கள் அதற்கு பழகியிருக்கக்கூடும்.​என்னைப் போன்ற ​புதியவர்களுக்கு இது எதிர்பாராத அதிர்ச்சியையே தரும்.

இப்படி சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் நடப்பதை எதிர்காலத்தில் தடுக்க வேண்டும். இயக்குனர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இவர்களின் தலையீடு இல்லா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசிடம் பெற்றுத் தரவேண்டும்.​

நாம் படப்பிடிப்பு நடத்தும் இடங்களுக்கு உரிய பணம் செலுத்தித்தான் அனுமதி வாங்குகிறோம். அப்படியிருந்தும் ஏன் இந்த சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டும்?? 

​எனக்கு பொதுமக்கள் உறுதுணையாக பாதுகாப்பாக நின்று படப்பிடிப்பை நடத்தித் தந்தனர். எல்லாருக்கும் இப்படி அமையாது.  யானைக் கவுனி மக்களுக்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், அது  மறக்க முடியாத அனுபவமாகவும்  இருந்ததாக  இயக்குநர்  கூறினார்.

படத்துக்கு ஒளிப்பதிவு எம்.சி.கணேஷ் சந்திரா. இவர் 'சலீம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். இசை தரண் குமார் -இவர் 'போடா போடி' ,'நாய்கள் ஜாக்கிரதை' படங்களுக்கு இசையமைத்தவர், கலை- 'குற்றம் கடிதல்' பிரேம், பாடல்கள்- யுகபாரதி ,படத்தொகுப்பு -'வேலையில்லா பட்டதாரி' எம்.வி.ராஜேஷ்குமார்.

எக்ஸட்ரா எண்டர் டெய்ன்மெண்ட் சார்பில் படத்தை தயாரிப்பவர்கள் வி. மதியழகன், ஆர். ரம்யா.  பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்து இருக்கிற நிலையில் ' தேவதாஸ் பிரதர்ஸ்' வேகமாக வளர்ந்து வருகிறது.


Post your comment

Related News
திருப்பதி பிரதர்ஸுக்கு புதுப்படம் நடித்துத் தரும் கமல்
ஜூனில், \'பிரதர்ஸ்\' டிரைலர் ரிலீஸ்!
ஏப்ரல் மாதம் திருப்பதி பிரதர்ஸ் மாதம்
கமல் பிறந்தநாளில் உத்தமவில்லன்! திருப்பதி பிரதர்ஸ் முடிவு!
விமலை டம்மியாக்கி கடுப்பேற்றும் லிங்குசாமி பிரதர்ஸ்..!
அஜீத்தின் 54வது படத் தலைப்பு \'விநாயகம் பிரதர்ஸ்\'.
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions