வித்தியாசமான முறையில் கல்யாண சாப்பாடு போட துடிக்கும் மலையாள நடிகர்..!

Bookmark and Share

வித்தியாசமான முறையில் கல்யாண சாப்பாடு போட துடிக்கும் மலையாள நடிகர்..!

இது எந்த நடிகரின் திருமணம் பற்றிய செய்தியும் இல்லை... இது விஷயமே வேறு.. கொஞ்சம் காமெடியாகக்கூட இருக்கும். 'பாட்ஷா' வில் நக்மாவின் அப்பா கேசவனாக நடித்த தேவனை உங்களுக்கு அறிமுகப்படுத்த தேவையில்லை.. தமிழில் அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் தலைகாட்டினாலும் முக்கால்வாசி நேரத்தை மலையாள சினிமாவுக்கே ஒதுக்கிவிட்டார்.

கடந்த வருடம் இவர் நடித்த 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படமும் கடந்த வாரம் இவர் நடித்து வெளியான மோகன்லாலின் 'ரசம்' படமும் ஆச்சர்யமான ஒரு ஒற்றுமையை கொண்டிருக்கின்றன.

'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தில் மிகப்பெரிய ஜவுளிக்கடை ஓனராக வரும் தேவன், தனது மகள் திருமணத்தின்போது ரசாயன உரம் இல்லாமல் தயாரான இயற்கை காய்கறிகளை வைத்து கல்யாண சாப்பாடு போடவேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்.. அப்படிப்பட்ட காய்கறிகளை இயற்கையாக விளைவிக்கும் மஞ்சு வாரியரிடம் அதற்கான காண்ட்ராக்ட்டை கொடுப்பார்.

மஞ்சுவும் திருமண தினத்திற்கு முதல்நாள் சொன்னபடி தேவையான காய்கறிகளை ஒப்படைப்பார். தற்போது கடந்த வாரம் வெளியான 'ரசம்' படத்தில் அரபு நாட்டில் பிசினஸ் செய்யும் தொழிலதிபராக நடித்திருக்கிறார் தேவன்.. இந்தப்படத்திலும் தனது மகள் திருமணத்தின்போது வித்தியாசமான கல்யாண சாப்பாடு போடவேண்டும் என நினைப்பார் தேவன்.

தனது மகளின் திருமணத்தை, அரபு நாட்டிலேயே நடத்த நினைத்தாலும் தனது சொந்த ஊரின் பாரம்பரிய கல்யாண சாப்பாட்டை போட்டு அங்குள்ளவர்களை அசத்த விரும்புவார் தேவன்.. இதற்காக கேரளாவில் பிரபல சமையற்காரரான நெடுமுடி வேணுவை ஒப்பந்தம் செய்ய கேரளாவுக்கு வருவார்... எங்கே வெளிநாட்டுக்கு வந்து சமையல் செய்ய, நெடுமுடிவேணு மறுத்துவிடுவாரோ என்று, சிபாரிசுக்காக தனது நண்பரான சூப்பர்ஸ்டார் மோகன்லாலையே அழைத்து வந்து பேசி, அவரை சம்மதிக்க வைப்பார்.

(மோகன்லால் இதில் நடிகராக, சூப்பர்ஸ்டார் மோகன்லால் கதாபாத்திரமாகவே நடித்திருந்தார்).. இந்த இரண்டு படங்களிலும் தேவனுக்கு ஒரே மாதிரியான கேரக்டர்கள் அமைந்தது ஆச்சர்யமானதுதான்.


Post your comment





Related News
தூய்மை நவிமும்பை திட்டத்தின் தூதராக பாடகர் சங்கர் மகாதேவன் நியமனம்
கத்தி சண்டை திரைப்படத்தில் வாய்பளித்த விஷால் : “வாசுதேவன் குமணன் “
விஷாலின் நண்பனாக கத்தி சண்டையில் அறிமுகமாகும் வாசுதேவன்!
நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் வழங்கும் “பிரகாமியம்”!
பாடகர் சங்கர் மாகாதேவன் மருத்துவமனையில் அனுமதி
சிம்புதேவன் என்ன ஆனார்?
தியேட்டரில் அதிரும் புலி கொண்டாட்டம்…
புலி பிறந்தநாளில் புலி
சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்
யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions