உறவுகளுக்காக சொந்த ஊரில் வீடு கட்டும் தேவயானியின் கணவர்

Bookmark and Share

உறவுகளுக்காக சொந்த ஊரில் வீடு கட்டும் தேவயானியின் கணவர்

நடிகை தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ராஜகுமாரன் வந்திருந்தார்.

அப்போது அவரை சந்தித்த நிருபர்களிடம் ராஜகுமாரன் கூறியதாவது:–

‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘காதலுடன்’, ‘திருமதி தமிழ்’ உள்ளிட்ட நான் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கதையை தந்துள்ளேன்.

ராதே பிலிம்ஸ், இனியா மியூசிக்கில் நான் சொந்தமாக தயாரித்து இயக்கியுள்ள ‘திருமதி தமிழ்’ படத்தில் சங்க இலக்கியங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து பாடலாக உருவான ‘திருக்குறள் இடையழகி’ பாடலும், ‘தமிழ் தமிழ்’ பாடலும் இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முதன்மை பாடலாக போடப்பட்டு மாணவ, மாணவிகள் நடனம் ஆடி வருகிறார்கள்.

‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படத்தில் வரும் காதல் கதையை போல நானும், நடிகை தேவயானியும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இப்போது எங்களுக்கு இனியா, பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர்.

நான் பல்வேறு மாநிலம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு படப்பிடிப்புக்கு சென்று வந்தாலும் சொந்த ஊரு, மண்ணில் வந்து தங்கி இருந்தால்தான் எனக்கு மகிழ்ச்சி. அதற்காக அந்தியூர் அருகே ஆலாம்பாளையத்தில் என் சொந்த நிலத்தில் உறவுகளுடன் கூடி வாழ்வதற்காக புதிதாக வீடு கட்டியுள்ளேன். இந்த மாதத்தில் புதுமனை புகுவிழா நடைபெறும்.

இவ்வாறு  அவர் கூறினார். 


Post your comment





Related News
மாமியாராக மாறிய தேவயானி
நீண்ட இடைவேளைக்கு பிறகு டீச்சராக தேவயானி
அரைத்த மாவையே அரைக்க விரும்பாத தேவயானி!
மீண்டும் சினிமாவில் தேவயானி
டீச்சர் வேலைக்கு போகிறார் தேவயானி!
தென்னிந்திய நடிகைகளின் மறுபக்கம்
இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்து: மருத்துவமனையில் அனுமதி
ஊருக்கு உபதேசம் அப்படி போகிறது தேவயானியின் அட்வைஸ்.
ஏ ஆர் ரஹ்மானை விமர்சித்த.. தேவயானி ஆத்துக்காரர்(சோலார் ஸ்டார்)!
எனக்கு எல்லாம் ஒன்றுதான், தேவயானி கருத்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions